கூத்தின் அழகியல்: குருக்கள்மடத்தில் நிகழ்த்துகை செய்யப்பட்ட “குருக்கேத்திரன் போர்” வடமோடிக் கூத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
கலைபற்றிய கருத்தாடலில் படைக்கப்பட்ட கலையை நுகரும் சுவைஞன் பெறும்
அனுபவம் பற்றிய கருத்துக்கள் அடிப்படையானது. கலைப்படைப்பை சுவைத்தலாகிய அழகியல்
அனுவம் கலைப்படைப்பின் தன்மை, சுவைஞனின் தகுதிக்கேற்ப வேறுபடும். இவ்வாய்வில்
மட்டக்களப்பில் நிகழ்த்துகை செய்யப்படும் பாரம்பரிய நிகழ்த்துகை வடிவமான கூத்துக்களை
ரசிக்கும் சுவைஞன் பெறும் அழகியல் அனுபவம் பற்றிய கருத்துக்கள் குருக்கள்மடத்தில்
நிகழ்த்துகை செய்யப்பட்ட “குருக்கேத்திரன் போர்”வடமோடிக் கூத்தை அடிப்படையாகக் கொண்டு
ஆய்வு செய்யப்படுகின்றது. இவ்வாயவு அழகியல் பற்றிய கருத்துருவாக்கத்தை விளங்கிக் கொண்டு
அக்கருத்துருவாக்கத்தின் பின்னணியில் கூத்தின் அழகியலை தெளிவுபடுத்துதல். கூத்தின் அழகியல்
ஏனைய கலைகளில் இருந்து பெறப்படும் அழகியல் அனுவத்தில் இருந்து வேறுபட்டு நிற்கும்
தன்மையை அடையாளப்படுத்தல், அதுவே கூத்தின் அழகியலின் அடிப்படை என்பதை
தெளிவுபடுத்தல்இ கூத்தின் அழகியலைப் பெறுவதில் சமூகக் காரணிகள் பெறும் முக்கியத்துவத்தை
அடையாளப்படுத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டிருக்கும். கூத்துக்கள் சமூக ஒன்று
கூடலின், ஒருமைப்பாட்டின் இணைவில் நிகழ்த்துகை செய்யப்படும் வடிவமாகும். கூத்தாடும் சூழலில்
கூத்தாட்டக் கலைஞர், பயிற்றுவிப்பாளர் (அண்ணாவியார்), கூத்தைப் பார்த்து இரசிப்பதற்காகக்
கூடும் மக்கள் யாவரும் மிகவும் நெருக்கமான உறவுநிலையுடைய சமூக உறுப்பினர்களாகவே
விளங்குவர். இவர்கள் கூத்தின் பயிற்சிக்காலத்தில் இருந்து இறுதி அரங்கேற்றம் வரை கூத்தாட்ட
வெளியில் இணைந்து பெறும் அனுபவம் கூத்தின் அழகியலில் அடிப்படையாக அமைகின்றது.
இவ்வழகியல் அனுபவம் கூத்தளிக்கைக்கான சமூக உறுப்பினர்கள் சேர்ந்திருத்தல்,
கூத்தளிக்கையை பார்த்து இரசித்தல், கூத்தளிக்கையின் கலைத்துவ வெற்றிக்கான
பங்களிப்புக்களை வழங்குதல், கூத்தளிக்கையுடன் தம்மை இணைத்துக் கொள்வதற்கான
பிரயத்தனங்களை மேற்கொள்ளுதல் என்பவற்றின் போது பெறப்படும் மனமகிழ்ச்சியாகும். கூத்தின்
மூலம் பெறப்படும் அழகியல் அனுபவம் சமூகங்களின் இணைவு, உறுதிப்பாடு, நெருக்கம்,
ஒருமைப்பாடு, நல்லிணக்கம், நற்சிந்தனை என்பனவற்றை ஏற்படுத்துவதற்கு உதவுகின்றது.
இந்நிலையில் கூத்தின் அழகியல் என்பது பலரும் இணைந்து பெறும் குழும அனுபவமாக
விளங்குகின்றது என்றும், இது சமூகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படையாக
விளங்குகின்றது என்றும் குறிப்பிடலாம். இது இவ்வாய்வின் மையப்பொருள். சமூகத்தை
அடிப்படைகளைக் கொண்ட ஒரு ஆய்வாக இது அமைவதன் காரணமாக விளக்க முறையியல்
(Exploratory method) இவ்வாய்வில் கையாளப்படுகின்றது.
Description
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 731-737.
