பல்கலைக்கழக விளையாட்டு நிகழ்வுகளும் முஸ்லிம் மாணவிகள் பங்கேற்பில் உளவியல் சவால்களும்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

South Eastern University of Sri Lanka

Abstract

இவ்வாய்வின் நோக்கமானது இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் முஸ்லிம் மாணவிகள், தமக்கு பல்கலைக்கழகமானது சகல விதமான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்த போதிலும், விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமான பல்வேறு உளவியல் சவால்களை அடையாளம் கண்டு அதற்கான பரிந்துரைகள் மற்றும் மாற்று நடவடிக்கைகளை உள்ளடக்கி அதற்கான தீர்வினை முன்வைப்பதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இலங்கையில் உள்ள பதினைந்து பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரே ஒரு பல்கலைக்கழகமாக இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் அதிகளவு உள்வாங்கப்படுகின்ற பல்கலைக்கழகமாகவும் இதுவே காணப்படுகின்றது. அதிலும் கலை கலாச்சார பீடத்திற்கு தெரிவு செய்யப்யப்பட்ட முஸ்லிம் மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளில் மட்டுமன்றி விளையாட்டு நிகழ்வுகளிலும் குறிப்பிடத்தக்களவுக்கு முன்னணியில் திகழ்நது வந்துள்ளனர் என்பதை இப்பல்கலைக்கழகத்தின் கடந்த கால விளையாட்டு துறை வருடாந்த அறிக்கைகள் பறைசாற்றி நிற்கின்றன. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுக்காலப் பிரிவினுள் மேற்சொன்ன விளையாட்டுத்துறை பங்கேற்பானது முற்றாக வீழ்ச்சியடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை பிற்பட்டகால அறிக்கைகள், தொடர்ந்தேர்ச்சையான அவதானிப்புக்கள் மூலம் இனங்கானப்பட்டுள்ள பாரியதொரு குறைப்பாடாகும். இப்பின்னணியே இவ்வாய்வுக்கான முக்கிய உந்துதல் காரணி ஆகும்.இவ்வாய்வுக்கு கலை மற்றும் கலாச்சாரப் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் தமது கற்கை நெறியை தொடந்து கொண்டிருக்கும், விளையாட்டில் ஆர்வமுள்ள இருபது முஸ்லிம் மாணவிகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் நோக்குடை மாதிரியை பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்கானல், குழு கலந்துரையாடல் மூலமும் தகவல்கள் பெற்பட்டன. ஆய்வின் பெறுபேறுகளாக சுயவிருத்தியின்மை, நனவிலி ஒடுக்கல், பாதுகாப்பின்மை உணர்வு, எதிர்மறை சமூக அறிகை எனும் உளவியல் சவால்களை அவர்கள் எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டன. அவ்வாறான காரணங்களினால் விளையாடச் செல்லாது இருப்பதனால், உடற் பருமன், உயர் குருதியழுத்தம், துணிச்சலின்மை, நம்பிக்கையின்மை எனும் விளைவுகள் ஏற்பட்டிருப்பது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. இத்தகைய பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளாக சமூகமயமாக்கல், அறிகை மூலமும் நடத்தை மூலமும் ஊக்குவிப்புடன் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்து, Psycho Education மூலம் மாணவர்கள் மத்தியில் விளையாடுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

Description

Citation

6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 881-886.

Endorsement

Review

Supplemented By

Referenced By