பொத்துவில் அறுகம்குடா பிரதேச முஸ்லிம்களின் கலாசாரத்தில் சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்- ஓர் இஸ்லாமிய நோக்கு

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka

Abstract

பொருளாதார முக்கியம் பெற்று விளங்கும் சுற்றுலாத் துறையின் மூலம் கலாசார ரீதியான தாக்கங்கள் ஏற்படுகிறது. அந்தவகையில் இவ்வாய்வானது சுற்றுலாத் துறையின் மூலம் அறுகம்குடா பிரதேச முஸ்லிம் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் கலாசார ரீதியான தாக்கங்களை அடையாளம் கண்டு, அவைகளுக்கான இஸ்லாமிய கருதுநிலையை விளக்குவதாக ஆய்வின் பிரதான நோக்கங்களையும், மேலும் இஸ்லாத்திற்கு முரணான தாக்கங்களை தவிர்ப்பதற்கான இப்பிரதேச மஸ்ஜிதுகளின் பங்களிப்பு எனும் துணைநோக்கத்தினையும் கொண்டுள்ளது. அளவு மற்றும் பண்புசார் தன்மை கொண்ட இவ்வாய்வானது, முதலாம் நிலைத் தரவுகளாக வினாகொத்து, கள அவதானம் போன்றவையும் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பொத்துவில் அறுகம்குடா தொடர்பான அறிக்கைகள், தலைப்புடன் தொடர்புபட்ட ஆய்வுக்கட்டுரைகள், ஆவணங்கள், நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தள தகவல்கள் போன்ற தரவுகளை கொண்டமைந்துள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், இலகு மாதிரி எடுப்பு முறை மூலம் அறுகம்குடா சுற்றுலாத்தளம் பற்றி நன்கறிந்த இருநூறு நபர்களுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு, பெறப்பட்ட தரவுகள் MS Excel 365 மென்பொருளினூடாகவும், அவதானம் மூலம் பெறப்பட்ட தரவுகள் குறியீட்டுப் பகுப்பாய்வினூடாகவும், மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் விடயப் பகுப்பாய்வு முறையில் பகுப்பாய்விற்குற்படுத்தப்பட்டும் முடிவுகள் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களிடம் சுற்றுலாத்துறையின் மூலம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணான கலாசாரத் தாக்கங்கள் இலையோடியுள்ளன என்பதே இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். மேலும் இஸ்லாமிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்கள், மற்றும் கலாசார நிறுவனங்களுக்கும் பயன்மிக்கதாக அமைவதுடன், இனிவரும் காலங்களில் சுற்றுலா துறையினால் முஸ்லிம்களிடையே ஏற்படும் கலாசார தாக்கங்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு துணையாக அமையும் ஓர் ஆவணமாகவும் இவ்வாய்வு அமைந்துள்ளது.

Description

Citation

Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)

Endorsement

Review

Supplemented By

Referenced By