பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அமுலாக்கமும் அதன் நடைமுறைகளும்: ஓர் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
பாடசாலைகளில் ஆசிரிய வாண்மைசார் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் உரிய
பயன்தரவில்லை என்ற குறைபாட்டை களையும் முகமாகவும் தரமான ஆசிரியர் அபிவிருத்தியை
ஏற்படுத்துவதற்கும் என அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி
நிகழ்ச்சித் திட்டமாகும். (School Based Teachers’ Development – SBTD) இத்திட்டத்தின் மூலம்
ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்குத் தேவையான விடயங்களை பாடசாலை மட்டத்திலே அதிபர்
கண்டறிந்து பொருத்தமான செயற்றிட்டங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கு இதன் மூலம் வகை
செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் எதிர்பார்க்கும் நோக்கங்களாக, பாடசாலை மட்ட ஆசிரிய
அபிவிருத்தி செயற்றிட்டத்தில் உள்ள அம்சங்களை இனங்காணல், அதற்கான வளங்களை
இனங்காணல் மற்றும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டதினை
நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகளின் செயற்பாடுகள் கண்டறிதல் என்பனவாகும். இவ்வாய்வின்
ஆய்வுப் பிரச்சினையாக பாடசாலைகளுக்கு நேரடியாக நிதி; கையளிப்புச் செய்யப்படுகின்ற போதும்
அதனைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகள் சரியான கொள்கையின் கீழ்
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன. மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள கோறளைப்பற்றுப் பிரதேசம் ஆய்வுக்குரிய பிரதேசமாகும். கோறளைப்பற்றுப்
பிரதேசத்தில் உள்ள 15 அரச பாடசாலைகளில் 1AB,1C,Type-II வகையைச் சேர்ந்த ஏழு
பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கிய மீளாய்வுக்கு பாடசாலை மட்ட ஆசிரிய
அபிவிருத்தி தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கல்வி அமைச்சின் பிரதான வெளியீடு
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் கல்வி மற்றும் அபிவிருத்தி தொடர்பான கல்வி அமைச்சின் சுற்று
நிருபங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாய்வு ஒரு கள ஆய்வாக அமைந்துள்ளது. அளவுசார்
ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்விலே வினாக்கொத்து மூலம் பெறப்படும்
தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. ஆய்வு முடிவுகளின் படி கோறளைப்பற்றுப் பிரதேசப்
பாடசாலைகளில் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதில் 53மூஆசிரியர்களின் கருத்துபடி அதற்கான வளங்கள் போதுமானதாகக்
கிடைப்பதில்லை. அத்தோடு இதனை நடைமுறைப்படுத்துவற்கு உரிய செயற்பாடுகள் பாடசாலைகளில்
66மூஆசிரியர்களின் கருத்துப்படி பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை. ஆசிரியர்களின்
உண்மையான தேவைப்பாடுகள் இனங்காணப்படுதல், ஆசிரியர்கள் பங்குபற்றுதலுக்கான வாய்ப்பு,
கல்விக் கோட்டங்கள் மற்றும் வலயங்களின் கண்காணிப்பு போன்றவை மிகவும் மோசமான நிலையில்
இருப்பதை இவ்வாய்வு மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பெரும்பான்மையான ஆசிரியர்களின்
கருத்துப்படி இந்நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான பாடசாலை மட்டத்திலான
செயற்பாடுகள் வீழ்ச்சியான நிலையில் இருப்பதையே காட்டி நிற்கின்றது.
Description
Keywords
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 643-649.
