திருமணமான முஸ்லிம் பெண்கள் குடும்ப ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள்: பகினிகஹவெல் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Abstract
இஸ்லாம் குடும்பம் என்ற நிறுவனத்தை புனிதமிக்க நிறுவனமாக கருதுகின்றது. இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் அது மனித அபிவிருத்தியில் இயற்கை வரம்பை மீறாமல் செயல்படும் குடும்ப அமைப்புக்கு அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது. அந்தவகையில் குடும்ப வாழ்வை முறையாக கொண்டு செல்வதில் பிரச்சினைகளும், பிணக்குகளும் தோன்றுவது இறைநியதியாகும். குடும்ப வாழ்வின் போது ஒவ்வொரு அங்கத்தவரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும், பொறுப்புக்களையும் வரையறுத்துள்ளது. ஆயினும் அவை உதாசீனம் செய்யப்படும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகுவது தவிர்க்க முடியாததாகும். அந்தவகையில் இவ்வாய்வு மொனராகலை மாவட்ட பகினிகஹவெல பிரதேச முஸ்லிம் பெண்களின் குடும்ப ரீதியான பிரச்சினைகளை பரிசீலித்து, அப்பிரச்சினைகள் உருவாகுவதற்கான மூலக் காரணங்கள் மற்றும் அப்பிரச்சினைகள் குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்திய பாதிப்புக்களை விளக்குவதாக அமைகிறது. குறிக்கோள் மாதிரி அடிப்படையில் 30 குடும்பங்களில் திருமணமான முஸ்லிம் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணல் இடம்பெற்றது. பெறப்பட்ட தகவல்கள் யாவும் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு இவ்வாய்வு இலக்கிய மீளாய்வின் மூலம் கோட்பாட்டு அமைப்புத்திட்டத்தை நிறுவியுள்ளது. அந்தவகையில் இப்பிரதேசத்தில் பெண்கள் குடும்ப ரீதியாக பல பிரச்சினைகளை அவர்களது வாழ்வில் எதிர்கொண்டு வருகின்றனர். குழந்தை வளர்ப்பு, வருமானம், கணவன், இனபந்துக்கள், இஸ்லாத்தைப் பற்றிய போதிய அறிவின்மை போன்ற காரணங்களினால் பல பிரச்சினைகளுக்கு இப்பிரதேச பெண்கள் முகம் கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தை வளர்ப்பு, வருமானம் போன்ற பிரச்சினைகளின் மூலமே அதிகமான பிரச்சினைகளை இப்பிரதேச குடும்பங்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் இனபந்துகளுடனான உறவுகளின் போது கணவனின் தாய், உடன் பிறப்புக்கள், கணவனின் உடன்பிறப்புக்கள், சகோதரனின் மனைவி போன்றவர்களின் மூலம் பிரச்சினைகள் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. அதுபோன்ற இப்பிரதேசத்தில் அதிகமான குடும்பங்கள் பொருளாதாரத் தேவையுடையவராக காணப்படுகின்ற அதேவேளை பல பெண்கள் உளரீதியான பாதிப்புக்களுக்கும் இப்பிரதேசத்தில் உள்ளாகியிருப்பது ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று இப்பிரதேச ஆண்கள் ஐங்காலத் தொழுகையை தவறவிடுவதுடன் தொழில்களிலும் பொடுபோக்குத் தன்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். ஆய்வின் முடிவில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான விதந்துரைகளும், எதிர்கால ஆய்வுகளுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
Description
Citation
Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
