ஷாபிஈ மத்ஹபில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் உள்ள சட்டப்பிரச்சினைகளில் வலுவான கருத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொற்கள்: முன்னைய இலக்கியங்களின் மீளாய்வு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka.

Abstract

இஸ்லாமிய சட்டத்துறை சார்ந்த மத்ஹபுகள் அத்துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புக்களைச் செய்துள்ளன. இவற்றுள் பிரதான நான்கு மத்ஹபுகளுள் ஷாபிஈ மத்ஹபும் ஒன்றாகும். இஸ்லாமிய சட்டத்துறை சார்ந்து தோன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஷரீஆவின் மூலாதாரங்களின் துணைகொண்டு பெறும்போது பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இம்மத்ஹப் அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்டன. அந்தவகையில் ஷாபிஈ மத்ஹபில் சட்டப் பிரச்சினைகளில் கருத்து வேற்றுமை நிலவும்போது அவற்றில் வலுவான கருத்துக்களை குறிக்கப் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களை வரையறை செய்யும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னைய இலக்கியங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் குறித்த மத்ஹப் சார்ந்த அறிஞர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் காணப்படும் சட்டப்பிச்சினைகளில் வலுவான கருத்தைக் குறிக்க பல நியமங்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டதோடு அவற்றின் பிரயோகங்களுக்கிடையில் காணப்படும் துல்லியமான வேறுபாடுகளும் வரையறை செய்யப்பட்டன. இஸ்லாமிய சட்டத்துறையில் ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட சட்டப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் போது அம்மத்ஹபின் கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்கும் மத்ஹபுகளுக்கிடையிலான ஒப்பீடுகளுக்கும் இவ்வாய்வு உறுதுணையாக அமையவல்லது.

Description

Citation

7th International Symposium - 2020. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 278-290.

Endorsement

Review

Supplemented By

Referenced By