ஈழத்துப் புலம்பெயர் தமிழிலக்கிய ஆய்வு முயற்சிகள்: ஒரு விமர்சன நோக்கு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.

Abstract

ஈழத்தில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு அஞ்சி ஏராளமான தமிழர்கள் 1970களை அடுத்து இந்தியாவிற்கும்> ஏனைய ஐரோப்பிய> வட அமெரிக்க நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர். இவர்களில் புத்தி ஜீவிகளும்> எழுத்தாளர்களும் அடங்குவர். அவர்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு ஆக்க இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்களே புலம்பெயர் இலக்கியங்கள் எனப்படுகின்றன. அவ்வாறான ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியங்களை மையப்படுத்தி ஆய்வு முயற்சிகள் பல தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாய்வுகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வியல் அனுபவங்கள்> பண்பாட்டு நடைமுறைகள்> சமுதாயச் சிக்கல்கள்> அரசியல் - பொருளாதார இடர்பாடுகள்> தாயக நினைவுடன் கூடிய அகதி வாழ்வு> அனைத்துலக நோக்கு> புதிய சூழல் சார் வெளிப்பாடுகள்> பெண்களின் விழிப்புணர்வு மற்றும் விடுதலை> புலம்பெயர் தமிழிலக்கிய வளர்ச்சி நிலை முதலிய கருப்பொருள்களைப் பிரதிபலிப்பவையாகவே காணப்படுகின்றன. இவ்வாய்வு முயற்சிகள் வேறுபட்ட காலங்களை வரையறை செய்தும்> வேறுபட்ட இலக்கியப் புலத்திலும்> வேறுபட்ட நோக்கு நிலையிலும்> மேலோட்டமான பார்வையிலும் உதிரிக் கட்டுரைகளாகவும்> விமர்சனக் குறிப்புக்களாகவும்> ஆய்வுகளாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதேச ரீதியாக எவ்வித ஆய்வு முயற்சிகளும் பூரணத்துவமிக்க ரீதியில் மேற்கொள்ளப்படவில்லை. போருக்குப் பின்னரான ஈழத்துப் புகலிடத் தமிழிலக்கியங்களான கவிதை> சிறுகதை> நாவல்> கட்டுரை முதலியவற்றை ஒன்றிணைத்துத் துல்லியமான> விரிவான எவ்வித சிறப்பாய்வு முயற்சிகளும் இற்றைவரை வெளிவரவில்லை. எனவே ஈழத்துப் புகலிடத் தமிழிலக்கியம்சார் ஆய்வுகளில் கண்டு கொள்ளப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகப் புதிய நோக்கிலான> விமர்சனக் கோட்பாட்டு நிலைக்கமைவான ஆய்வு முயற்சிகள்> ஆய்வாளர்களால் மேற்கொள்;ளப்பட வேண்டும் என்ற நோக்கில்> இற்றைவரை வெளிவந்த ஈழத்துப் புலம்பெயர் தமிழிலக்கிய ஆய்வு முயற்சிகளைத் தொகுத்து> அடையாளப்படுத்தி> அவற்றினை ஆய்வுக்குட்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கு> ஈழத்துப் புகலிடத் தமிழிலக்கிய ஆய்வு முயற்சிகளாக வெளிவந்த நூல்கள்> கட்டுரைகள்> ஆய்வேடுகள்> சிறப்பிதழ்கள் முதலியவை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன்> பிரதானமாக விமர்சன முறை மற்றும் விவரண முறை (விளக்கமுறை ஆய்வு) முதலிய அணுகு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

Description

Citation

11th South Eastern University International Arts Research Symposium on “Coping with Current Crisis for the Sustainable Development with Partners in Excellence” on 06th December 2022. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 38.

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By