ஹொரவப்பொதானை முஸ்லிம்களின் கல்வி நிலையும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Abstract
கவ்வியானது ஒரு நாட்டின் சகல துறைகளினதும் வளர்ச்சின்னு பிரதான காரணியாக உள்ளது. கல்வி என்பது மனிதனில் சிந்தனை, ஒழுக்கம், ஆற்றல், நுணக்கம், திறன், ஆளமை என்பனவற்றை விருத்தி செய்யும் ஒரு ஊடகமாகக் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் மனிதர்களுக்கிடையில் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய, அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கருவியாக காணப்படுகின்றது. இவ்வாய்வானது ஹொரவகொதானை பிரதேச முஸ்லிம்களின் கல்வி நிவையின் போக்கை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு “ஹொரவப்பொதானை பிரதேச முஸ்லிம்களின் கல்வி நிலையும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும்” எனும் தலைப்பில் இவ்வாய்வு ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் ஆய்வுப்பிரதேச முஸ்லிம்களின் கல்வியானது தோற்றகாலத்துடன் ஒப்பிடும் போது ஒரளவு வளர்ச்சியைக் கண்டருந்தாலும், சமகால உலக சுழற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் அடையவில்லை என்பர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் இவ்வாய்வானது, ஆய்வுப்பிரதேசத்தின் முஸ்லிம் கிராமங்களை அறிமுகப்படுதுதல், முஸ்லிம்களின் கல்வி நிலையை மதிப்பிடுதல், கல்வி நிறுவனங்களை அறிமுக்கப்படுத்துதல், கல்வி வளங்களையும் அதன் குறைபாடுகளையம் அடையாளப்படுத்துதல், முஸ்;லிம்களின் இருக்கைகயை உறுதி செய்தல், முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை முன்வைத்தல் போன்றனவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. எனவே, ஆய்வுப் பிரதேச முஸ்லிம்கள் கல்வி வளர்ச்சியில் சாதகமான முன்னேற்றத்தை அடையவேண்டுமானால், இப்பிரதேசத்தில் கல்வி விழிப்புணர்ச்சிக்கான கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபித்து அதன் மூலம் பல்வேறு கிரமங்களில் காணப்படும் முஸ்லிம் கல்வி அமைப்புக்களையும் ஒன்றினைத்து ஒரு வலைப்பின்னலை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு அமைப்பும் நிறுவனமும் தனித்தனித் தீவாக செயற்பட்டால் எதிர்பாக்கப்படும் எந்த அடைவுகளையும் எட்ட முடியாது. பல்வேறு பெயல்களில் விளம்பரப்பலகை போடும் அமைப்புகளாக மட்டுமே அமை சுரங்கி விடும். எனவே வளங்கள், ஆலொசனைகள், ஒத்துழைப்புகள் போன்றவற்றை நிறுவனங்களுக்கிடையில் வளவாளர்கள் கொண்டு பகிர்ந்து கொள்தற்கு தொடர்பாடல் மிக அவசியம் என்பதை இவ்வாய்வு முன்வைக்கின்றது.
Description
Citation
Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
