இஸ்லாத்தில் வக்பு ஒழுங்கும் இலங்கையில் அதன் நடைமுறையும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Abstract
இஸ்லாம் வறுமையை ஒழிப்பதற்காகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை
களைவதற்காகவும் இறை பாதையில் செலவளிப்பதை கடமையாக்கியுள்ளது. அதற்காக
வேண்டி ஸகாத் வழங்கல், ஸதகா செய்தல், அன்பளிப்பு வழங்கல், வஸிய்யத் செய்தல்,
வாரிசுரிமைப் பகிர்வு, குற்றப்பரிகாரம் வழங்கல், நஷ்டஈடு கொடுத்தல் மற்றும் கடன்
வழங்குதல் போன்ற இன்னோரன்ன வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த
முறைமைகளுள் வக்பு செய்தல் என்பது அதி முக்கியத்துவம் பெறும் ஒன்று. நபி (ஸல்)
அவர்களின் காலந்தொட்டு இன்றுவரை வக்பு ஒழுங்கானது பல்வேறு வளர்ச்சியினை
அடைந்துள்ளது. கால, இட, சூழலுக்கு ஏற்ப வக்பு என்ற பொறிமுறையின் அமுலாக்கம்
வேறுபட்டுக் காணப்படலாம். எனினும், இப்பொறி முறைக்கென்று சில நிபந்தனைகளையும்,
வரையறைகளையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நவீன கால
இஸ்லாமிய அறிஞர்கள் புராதன பிக்ஹூ சட்டங்களை அறிந்து வக்பு தொடர்பான புதிய
சட்ட ஒழுங்கை ஷரிஆவின் உயர் இலக்குகளுக்கு ஏற்ப முன்வைக்க வேண்டும். இந்தப்
பின்னணியில் வக்பு பற்றிய அறிமுகம், இஸ்லாத்தில் அதன் சட்ட திட்டங்கள், அதற்கான
ஆதாரங்கள், அவற்றின் வகைகள் மற்றும் அது தொடர்பான நவீன காலப்
பிரச்சினைகளும், அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் இலங்கையில் அதன் நடைமுறை
எவ்வாறு காணப்படுகிறது, அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் போன்றவற்றை
இஸ்லாமிய ஷரீஆவின் பின்னணியில் இருந்து இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
Description
Keywords
Citation
6th International Symposium 2019 on “Contemporary trends of Islamic Sciences and Arabic Studies for the nation development”. 12th December 2019. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 291-307.
