வினைத்திறனான மாணவர்களின் வெளியேற்றம், படுவான்கரைப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் (போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1C வகைப்பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

dc.contributor.authorTharsika, V
dc.date.accessioned2016-12-29T04:48:58Z
dc.date.available2016-12-29T04:48:58Z
dc.date.issued2016-12-20
dc.description.abstractபாடசாலைகின் கல்வி அபிவிருத்திக்கு வினைத்திறனான மாணவர்களின் வகிபங்கு அவசியமாகும். இவ்வாறான மாணவர்கள் தனிப்பட்டதும், குடும்பம், சமூகம், பாடசாலைகளில் நிகழும் பிரச்சினைகளின் நிமிர்த்தம் படுவான்கரைப் பாடசாலைகளிலிருந்து வெளியேறிச் செல்கின்றமையானது, இப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில் பல்வேறு வகைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இந்தவகையில் வினைத்திறனான மாணவர்கள் படுவான்கரைப் பாடசாலைகளிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்கள், அதனால் படுவான்கரைப் பாடசாலைகள் கல்வி அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றை அறிதல்எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட, படுவான்கரைப் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.இவ்வாய்விற்கென1C வகைப்பாடசாலைகள் ஆறும், வகுப்புக்களும் வசதி மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் நோக்கமாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஆசிரியர்களும், மாணவர்களும் எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, பேட்டிகாணல், ஆவணச்சான்றுகள் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் அளவறிசார் முறையும், பண்பறிசார் முறையும் இணைந்த கலப்புப் பகுப்பாய்வு முறையின் மூலம் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுப் பெறுபேறுகள் கண்டறியப்பட்டுள்ளன. படுவான்கரைப் பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் கல்வி மற்றும் கல்விசார் செயற்பாடுகளில் முன்னணியில் திகழும் மாணவர்கள் குடும்ப,சமூக, பாடசாலைக் காரணங்களின் நிமிர்த்தம் இப்பாடசாலைகளை விட்டு வெளியேறிச் செல்கின்றமையானது, இப்பாடசாலைகளின் கல்விஅபிவிருத்தியில் பரீட்சைகளின் அடைவு மட்டங்கள் குறைதல், இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் சாதனை மட்டங்களில் தொய்வு நிலை, கற்றல் சூழல் பாதிப்படைதல், அறிவு இழப்பு ஏற்படுதல் போன்ற பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது எனக்கண்டறியப்பட்டதோடு, இது தொடர்பில் பல பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.en_US
dc.identifier.citation6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 807-815.en_US
dc.identifier.isbn978-955-627-097-6
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/2018
dc.language.isoen_USen_US
dc.publisherSouth Eastern University of Sri Lankaen_US
dc.subjectவினைத்திறனான மாணவர்கள்en_US
dc.subjectபாடசாலைகளின் கல்வி அபிவிருத்திen_US
dc.subject1C வகைப்பாடசாலைகள்en_US
dc.titleவினைத்திறனான மாணவர்களின் வெளியேற்றம், படுவான்கரைப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் (போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1C வகைப்பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
IntSym_2016_proceeding_final_2_(1)_-_Page_807-815.pdf
Size:
363.77 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: