குடும்பத்தின் பொருளாதார தேவையை நிவர்த்தி செய்வதில் பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் வகிபாகம்

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka.

Abstract

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் கைத்தொழிற்துறை முக்கிய பங்காற்றி வருகின்றது. இலங்கையிலும் இத்துறை வளர்ச்சியில் பால் வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்றுள்ளனர். ஒப்பீட்டளவில் ஆண்களின் தொகையை விட பெண்களின் கைத்தொழிற் பங்கேற்பு விதம் அதிகமாகும். அதிலும் ஒப்பீட்டளவில் முஸ்லிமல்லாத பெண்களின் பங்கேற்பு விதத்தைவிட விட முஸ்லிம் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாகும். இருப்பினும் ஆய்வுப் பிரதேசமான மருதமுனைப் பிரதேசத்தில் கைத்தொழிற்துறை மூலம் வருமானம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சிறுகைத்தொழில் துறையில் அவர்களின் பங்கேற்பு முக்கியமானதாக இனங்காணப்பட்டு ள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு “குடும்பத்தின் பொருளாதார தேவையை நிவர்த்தி செய்வதில் பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் வகிபாகம்” எனும் தலைப்பில் இவ்வாய்வு இடம்பெறவுள்ளது. பொதுவாக இன்று பெண்களின் தொழிற்துறை பங்கேற்பு அவர்களின் பல்துறைசார் பொருளாதார செயற்பாடுகள் குறித்து பலராலும் பேசப்பட்ட போதும் சிறுகைத்தொழிற்துறை ஊடாக அவர்கள் ஆற்றும் பங்களிப்பு சமூகத்தால் பெருமளவு பேசப்படுவதில்லை. இதனையடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வானது மருதமுனைப் பிரதேச பெண்களின் சிறுகைத்தொழிற்துறை பங்கேற்பு கைத்தொழிற் துறையூடாக குடும்பத்தின் பொருளாதார தேவையை நிவர்த்தி செய்வதில் அவர்களின் வகிபாகம் தமது குடும்ப பொறுப்பையும் தாண்டி இத்துறையில் அவர்களின் ஈடுபாட்டிற்கான காரணங்கள் போன்றவற்றை கண்டறிதலை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாய்வானது இவ்வாய்வுக்கான தரவு சேகரிப்பதற்கு முதலாம் நிலைத் தரவு மூலங்களாக நேர்காணல் முறையும் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவு மூலங்களாக ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள் இணையத்தள ஆக்கங்கள் பிரதேச அறிக்கைககள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவுகள் விபரணப்பகுப்பாய்வு முறை மூலம் விபரிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் ஊடாக மருதமுனைப் பிரதேச முஸ்லிம் பெண்களின் சிறுகைத்தொழிற் துறையூடான வகிபாகம் அவர்களின் குடும்பத்தின் பொருளாதார தேவையை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது கண்டறியப்பட்டது .

Description

Citation

Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 02(02); 51-62.

Endorsement

Review

Supplemented By

Referenced By