இப்னு அறபியின் வஹ்ததுல் வுஜூத் (இருப்புண்மை ஒன்றே) கோட்பாடு: ஒரு மெய்யியல் பகுப்பாய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.
Abstract
இஸ்லாமிய சிந்தனையில் சூபித்துவம் தோன்றி வளர்ச்சியடைந்ததிலிருந்து சமய
அறிஞர்களுக்கும் (உலமாக்கள்), பெரிய சூபிஞானியர்களுக்குமிடையே ஒரு
அமைதியான முரண்பாடு ஆரம்பித்திருந்தது. பின்னைய காலப்பகுதியில் இம் முரண்பாடு
பாரதூரமான பரிணாமங்களை அடைந்தது. இப்பின்புலத்தில் இக்கட்டுரையானது
சூபித்துவ சிந்தனையில் பாரிய செல்வாக்கைச் செலுத்திய மாபெரும் அறிஞர் என
அழைக்கப்படும் இப்னு அறபியின் 'வஹ்ததுல் வுஜூத்' (இருப்புண்மை ஒன்றே), எனும்
கோட்பாட்டை மெய்யியல் ரீதியாக மொழிப்பகுப்பாய்வு செய்வதினை பிரதான
நோக்கமாகக் கொண்டுள ;ளது. இத்தகைய பகுப்பாய்வானது பொதுமொழி மற்றும்
சூபித்துவ அனுபவ மொழியில் உள்ள வாக்கியங்களினதும் கருத்துக்களினதும் சரியான
பாவனையினை வெளிக்கொணர உதவும். இப்னு அறபியின் கோட்பாடு உள்ளமை
பற்றிய ஒருமைவாதமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு இருத்தல் மட்டுமே
உண்டு. ஏனைய இருத்தல்கள் அந்த ஒரு இருத்தலின் வெளிப்பாடுகளாகும். எனினும்
பலருக்கு இக்கோட்பாட்டின் நுட்பமும் யதார்த்தமும் புரிவதில்லை. அத்துடன் சாதாரண
மக்களின் அறிவிற்கும் நம்பிக்கைக்கும் சவாலாகவும் அமைந்துள்ளது. இந்த விடயத்தில்
நடந்த தவறுகளைக் கண்டறியும் முயற்சியில் மொழிப்பகுப்பாய்வானது தெளிவினை
ஏற ;படுத்தும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது. ஆய்வாளர் முதல்தர மற்றும்
இரண்டாம்தரத் தகவல்களைப் பயன்படுத்தியுள்ளதோடு ஆய்வுடன் தொடர்புடைய
நூல்கள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களை வியாக்கியானங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.
Description
Keywords
வஹ்ததுல் வுஜூத், தாத், ஸிபத்து, ளாஹிர், மளாஹிர், இஸ்லாமிய சிந்தனையில் சூபித்துவம் தோன்றி வளர்ச்சியடைந்ததிலிருந்து சமய அறிஞர்களுக்கும் (உலமாக்கள்), பெரிய சூபிஞானியர்களுக்குமிடையே ஒரு அமைதியான முரண்பாடு ஆரம்பித்திருந்தது. பின்னைய காலப்பகுதியில் இம் முரண்பாடு பாரதூரமான பரிணாமங்களை அடைந்தது. இப்பின்புலத்தில் இக்கட்டுரையானது சூபித்துவ சிந்தனையில் பாரிய செல்வாக்கைச் செலுத்திய மாபெரும் அறிஞர் என அழைக்கப்படும் இப்னு அறபியின் 'வஹ்ததுல் வுஜூத்' (இருப்புண்மை ஒன்றே), எனும் கோட்பாட்டை மெய்யியல் ரீதியாக மொழிப்பகுப்பாய்வு செய்வதினை பிரதான நோக்கமாகக் கொண்டுள ;ளது. இத்தகைய பகுப்பாய்வானது பொதுமொழி மற்றும் சூபித்துவ அனுபவ மொழியில் உள்ள வாக்கியங்களினதும் கருத்துக்களினதும் சரியான பாவனையினை வெளிக்கொணர உதவும். இப்னு அறபியின் கோட்பாடு உள்ளமை பற்றிய ஒருமைவாதமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு இருத்தல் மட்டுமே உண்டு. ஏனைய இருத்தல்கள் அந்த ஒரு இருத்தலின் வெளிப்பாடுகளாகும். எனினும் பலருக்கு இக்கோட்பாட்டின் நுட்பமும் யதார்த்தமும் புரிவதில்லை. அத்துடன் சாதாரண மக்களின் அறிவிற்கும் நம்பிக்கைக்கும் சவாலாகவும் அமைந்துள்ளது. இந்த விடயத்தில் நடந்த தவறுகளைக் கண்டறியும் முயற்சியில் மொழிப்பகுப்பாய்வானது தெளிவினை ஏற ;படுத்தும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது. ஆய்வாளர் முதல்தர மற்றும் இரண்டாம்தரத் தகவல்களைப் பயன்படுத்தியுள்ளதோடு ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களை வியாக்கியானங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.
Citation
Kalam, International Research Journal, 15(1), June,2022. Faculty of Arts and Culture, SEUSL. pp.172-179
