கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் கற்றல் துணைச் சாதனங்களின் பயன்பாட்டுநிலை: அதிகஷ்ட பிரதேச ஆரம்பப் பிரிவு மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

South Eastern University of Sri Lanka

Abstract

மாணவர்களைச் சிறந்த தேர்ச்சிகளை எட்டச்செய்து அவர்களை நற் பிரசைகளாக மாற்றுவதில் கல்வியின் பங்கு மிக முக்கியமானது. இதனடிப்படையில் வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்படும் இடர் நிலமைகள் ஆய்வின் பிரச்சினையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் கலைத்திட்டத்தினை மாணவர்கள் அடையப்பெறச் செய்யவேண்டியது ஆசிரியரின் பொறுப்பாகும். ஆய்வுக் குடித்தொகையில் உள்ளடங்கும் மாணவர்களது திறன்களை வெளிக்கொணரக்கூடிய வகையில் ஆய்வு வினாக்களை உருவாக்கி பிரச்சினையை ஆய்வு செய்தல், கற்றல் துணைச்சாதனங்களின் இயல்புகள், செயற்பாட்டு நிலை ஆகியவற்றினை விளக்குவதோடு தரவுப் பகுப்பாய்வு முறையாக அதிகளவு பண்பறிசார்முறை பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் இவ்வாய்வானது விபரண ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 பாடசாலைகள் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வினாக்கொத்து, அவதானம், ஆவணம் போன்றவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டன. இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில ;கற்றல் துணைச்சாதனப் பயன்பாடு பற்றி அறிகையில் நேர்த்தியான முறையிலும் சிறப்பான முறையிலும் பயன்படுத்தப்படவில்லை மேலும் கற்றல் துணைச் சாதனங்களைப் பாடச் செயற்பாட்டிற்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றநிலை வளர்ச்சி பெறாததாகவே காணப்படுகின்றது. அவதானிக்க முடிகின்றது. மேலும் இப்பிரதேசத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மானவர்களினுடைய ஆர்வமானது குறைந்தமட்டத்திலேயே காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது இத்துடன் கற்பித்தல் துணைச்சாதனங்களின் நேர்த்தியான பயன்பாட்டுடன் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை முண்னெடுக்கும்போது கற்றலில் வெற்றி கிடைக்கும் என 78மூ ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறப்பானதும் நேர்த்தியானதுமான கற்பித்தல் துணைச் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவனைச் சிறந்த தேர்ச்சியுள்ளவனாகவும் ஆளுமையுள்ளவானகவும் வரச்செய்வதுடன் கற்றல் கற்பித்தலும் வெற்றியளிக்கும். நேர்த்தியற்ற போது மாணவர்கள் சரியான முறையில் பாட விடயங்களை விளங்கிக்கொள்ள முடியாமை முதலான எதிர்மறையான விடங்கள் உருவெடுக்கும் இருப்பினும் Dale இன் அனுபவக் கூம்பின் வழியான செயற்பாட்டு அனுபவங்களைக் கையாள்வதனூடாக முன்னெடுக்க முடியும்.

Description

Citation

6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 749-758.

Endorsement

Review

Supplemented By

Referenced By