கற்றலில் குறைவான ஆற்றலுடைய மாணவர்களும், வழிகாட்டல் ஆலோசனை சேவையின் தேவையும்: தெரிவு செய்யப்பட்ட மண்முனை தென்மேற்குக் கோட்ட சிரேஷ்ர இடைநிலைப் பிரிவு மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
கற்றலில் குறைபாடுடையோருக்கு வழிகாட்டல் ஆலோசனை சேவை
எந்தளவுக்கு தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது என்பதை இனங் காணுவதற்காகவே
மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தம், வறுமை, இயற்கை அனர்த்தம் போன்றவற்றின்
பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்த மண்முனை தென் மேற்குக் கோட்டத்திற்குட்பட்ட
பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கெனத்
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சிரேஷ்ர இடைநிலைப்பிரிவு மாணவர்கள் கற்றலில் பல்வேறு
சிக்கல்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொள்கின்றனர். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு
வீட்டுச் சூழல், பாடசாலைச் சூழல், மாணவர்களின் தனிப்பட்ட காரணங்கள் போன்றன எவ்வாறு
காரணிகளாக அமைகின்றன, இவற்றுக்கு வழிகாட்டும் வகையில் பாடசாலை வழிகாட்டல் சேவை
எந்தளவுக்கு நடைமுறைச் செயற்பாடு கொண்டதாக செயற்படுகின்றது, மேலும் அதனை சிறப்பாகச்
செயற்படுத்த எவ்வாறான உத்திகளை கையாள வேண்டும். போன்றவற்றை ஆராய்ந்து
இம்மாணவர்கள் எதிர்நோக்கும் கற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான விதப்புரைகளை
ஆய்வு நோக்கில் தெளிவுபடுத்துவதுடன், இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி
கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபட உதவும் வகையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வானது முதனிலை, இரண்டாம் நிலை தரவு மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு
பண்புசார், அளவுசார் தரவுகளின் அடிப்படைகளில் அளவைநிலை ஆய்வாக
வடிவமைக்கப்பட்டதோடு, தரவு, தகவல்கள் யாவும் ஒழுங்கமைக்கப்பட்டு விபரணப்பகுப்பாய்வு
முறையில் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மாணவர்களில் 83% மாணவர்கள் கற்றலில்
குறைபாடுடையோராகக் காணப்படுகின்றமையும், இவர்களில் பெரும்பாலான மாணவர்கள்
கற்பித்தலை விளங்கிக் கொள்ள முடியாத தன்மையுடையவர்களாக உள்ளமையும்
கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு வழிகாட்டல் ஆலோசனை சேவையை மேலும் நடைமுறைச்
செயற்பாடு கொண்ட முறையில் அமுல்படுத்தி மாணவர்களுக்கான வழிகாட்டல், ஆலோசனைகளை
வழங்க வேண்டிய தேவை அவசியமாக உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுப்
பிரதேசத்தில் 21 பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் 1 AB, 1C பாடசாலைகள் 5 ஆய்வு
மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, அதிபர்கள் - 5, ஆசிரியர்கள் - 45, 5
ஆலோசகரிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் முறைகள் மூலம் தகவல்கள் பெறப்பட்டன.
அத்தோடு சிரேஷ்ர இடைநிலைப் பிரிவு 125 மாணவர்களும் ஆய்வுக் குடித்தொகையில்
மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து சிரேஷ்ர
இடைநிலைப்பிரிவு மாணவர்கள் கற்றல் குறைபாடுடையவர்களாக உள்ளமையும், வழிகாட்டல்
ஆலோசனை சேவையின் தேவையும் உணரப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
வகையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சார்பாக தீர்வாலோசனைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.
Description
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 850-857.
