தாய்மார்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் பெண்பிள்ளைகள் மீதான அதன் தாக்கமும்
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.
Abstract
குடும்பம், அதன் உறுப்பினர்களின் நலவாழ்வில் பலவழிகளில் செல்வாக்குச்
செலுத்துகின்றது. குறிப்பாகப் பிள்ளைகளின் உடல்விருத்தி, உளவிருத்தி, மற்றும்
ஒழுக்கவிருத்தி நிலைமைகளில் பாரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் தாய்மார்கள்; வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான
இடம்பெயர்வானது, குடும்பங்களில் நிலவுகின்ற வறுமை காரணமா அமைகின்றது.
மறுபுறம், பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பானது, இலங்கையில் அந்நியச்
செலாவணியை ஈட்டித்தருகின்ற ஒன்றாக அமைகின்றமையால், இத்தகைய
வேலைவாய்ப்புக்களை அரசு அனுமதிக்கின்றது. குடும்பங்களில் நிலவுகின்ற
வறுமையைப் போக்குவதற்பும் பிள்ளைகளின் சுபீட்சமான எதிர்காலத்தையும் கருத்தில்
கொண்டு, தாய்மார்கள் இத்தகைய வேலைவாய்ப்பை நாடிச் செல்கின்றனர். தாய்மார்
வெளிநாடுகளுக்குச் செல்வதனால் குடும்பங்களில் பொருளாதாரம் சாதகமான
அடைவுகளை அடைந்துள்ளது. இருப்பினும், அவற்றிற்குப் பகரமாக, பிள்ளைகள்
பல்வேறு வகையான பாதிப்புக்களை எதிர்கொள்வதனையும் ஆய்வுகள் முன்வைக்
கின்றன. இவ்வகையில் இவ்வாய்வு குறிப்பாக தாய்மார் வெளிநாட்டு வேலை
வாய்ப்பிற்காகச் செல்வதனால் பெண்பிள்ளைகள் மீது ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி
ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய பாதிப்புக்களை
ஆராய்வதற்காக இவ்வாய்வானது, பண்புரீதியான ஆய்வு முறையியலைப் பயன்படுத்
தியுள்ளது. இதற்கான தகவல்களைச் சேகரி;ப்பதற்காக நோக்கமாதிரியை அடிப்ப
டையாகக் கொண்டு, தாய்மார் வெளிநாடு சென்ற சுமார் 20 குடும்பங்களிலுள்ள, பத்து
வயது தொடக்கம் இருபது வயதிற்குட்பட்ட பெண்பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு,
ஆழமான கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். பெற்றுக்கொள்ளப்பட்ட
தகவல்கள் உள்ளடக்கப் பகுப்பாய்வுக் உட்படுத்தப்பட்டது. இவ்வாய்வானது தாய்மார்
வெளிநாடு சென்ற குடும்பங்களிலுள்ள பெரும்பாலான பெண்பிள்ளைகள், பாடசாலை
இடைவிலகல், அடிக்கடி பாடசாலைக்குச் செல்லாதிருத்தல், கல்வி அடைவுகளில்
பின்தள்ளப்படல் ஆகிய கல்விரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
என்பதனையும், நெருங்கிய குடும்ப உறவினர்களால் கணிசமான பெண்பிள்ளைகள்
பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங் கொடுப்பதனையும், குடும்பமட்டத்திலும், சக
நண்பர்களாலும் புறமொதுக்கப் படுவதனையும் பிரதான கண்டுபிடிப்பாக இவ்வாய்வு
முன்வைக்கின்றது. எனவே இவ்வாய்வானது தாய்மார் வெளிநாடு சென்றுள்ள
குடும்பங்களிலுள்ள பெண்பிள்ளை களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை
உருவாக்குவதற்கு ஆதாரமாக அமையமுடியும் என நம்பப்படுகின்றது
Description
Citation
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,13(4), 2020. pp. 191-204.
