சமூக நல்லுறவை மேம்படுத்துவதில் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் பங்களிப்பு - யாழ் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு

dc.contributor.authorSinthupriya, S
dc.date.accessioned2016-12-29T07:58:33Z
dc.date.available2016-12-29T07:58:33Z
dc.date.issued2016-12-20
dc.description.abstractஇன்றைய சமுதாயமானது சமய, இன மோதல்களால் தாக்குண்டு வன்முறை, பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பலவற்றால் கட்டுப்பட்டு சமூக நல்லுறவு என்ற அடித்தளத்தை விட்டு விலகிச் செல்வதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மனித மனங்களில் உள்ள அமைதியற்ற தன்மையே ஆகும். இத்தகைய நிலைப்பாட்டில் சமூகம், நாடு, உலகம் என்ற வகையில் நல்லுறவினைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை, நேட்டோ நாடுகளின் ஒன்றியம், ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பு, அகில உலக மன்னிப்புச் சபை போன்ற பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தபோதும் சமூகத்தை நிலையான ஓர் கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர முடியவில்லை என்பது வெளிப்படை. இந்நிலை ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைவது ஒவ்வொரு மனிதனும் மனித மாண்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயற்படாமையே ஆகும் என்பதை அறியமுடிகின்றது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் மனித மாண்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மனித மேம்பாட்டுச் சிந்தனைகளை சமூகத்திற்கு வழங்கி ஒவ்வொருவர் மனதிலும் அமைதியை நிலைநாட்டி அதன்மூலம் உலக சமாதானத்தை எட்டுவதை குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுவரும் ஓர் நிறுவனமாக பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தை அடையாளம் காண முடிந்தது. உலகிலுள்ள ஏனைய விலங்குகளைப் போலவே மனிதனும் பிறக்கின்றான், உயிர்வாழ்கின்றான், தன் இனத்தைப் பெருக்குகின்றான். ஆனால் ஏனைய விலங்குகளிடமிருந்து மனிதனை உயர்வுபடுத்திக் காட்டுவது அவனிடமுள்ள உயர்ந்த மனித மாண்பாகும். இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது இன்றைய சமூகமானது சமூக நல்லுறவை வேண்டிநிற்பதை அறியமுடிகின்றது. இதனை அடித்தளமாக வைத்து “சமூகநல்லுறவை மேம்படுத்துவதில் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் பங்களிப்பு - யாழ் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆயு;வு” எனும் தலைப்பு ஆய்விற்காக எடுக்கப்பட்டது. இவ் ஆய்வின்மூலம் யாழ்ப்பாணத்தில் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் தோற்றப் பின்னணி, சமூகநல்லுறவினை ஏற்படுத்துவதற்கு இந் நிறுவனம் எவ்வாறான செயற்பாடுகளைச் செய்துவருகின்றது. அதனால் மக்களின் மனங்களில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதா? இதன்மூலம் எதிர்கால பல்லின சமூக மக்களிடையே ஓர் அமைதியான சூழ்நிலை நிலவுமா? என்ற பல எதிர்வுகூறல்களை உள்ளடக்கியதாக இவ் ஆய்வானது அமையப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது சமூகநல்லுறவு பற்றிய சிந்தனையினையும், சமூகநல்லுறவினை சீரழிக்கின்ற காரணிகளையும், சமூகநல்லுறவை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாக இவ் ஆய்வானது வெளிப்படுகின்றது.en_US
dc.identifier.citation6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 917-928.en_US
dc.identifier.isbn978-955-627-097-6
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/2033
dc.language.isoen_USen_US
dc.publisherSouth Eastern University of Sri Lankaen_US
dc.subjectசமூக நல்லுறவுen_US
dc.subjectபிரம்ம குமாரிகள் யோக நிலையம்en_US
dc.subjectஇராஜயோகம்en_US
dc.titleசமூக நல்லுறவை மேம்படுத்துவதில் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் பங்களிப்பு - யாழ் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
IntSym_2016_proceeding_final_2_(1)_-_Page_917-928.pdf
Size:
815.77 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: