திருக்குறளில் வெளிப்படும் பொருளியற் சிந்தனைகள்

Abstract

மனித வாழ்வோட்டத்தில் ‘பொருள்’இன்றியமையாததும் தவிர்க்கமுடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது பொருளே ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனத்தில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும். திருக்குறள் உலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறிகளை வகுத்துரைத்துள்ளது. குறிப்பாக மனிதன் பொருளீட்டி எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்து ரைத்துள்ளது. திருக்குறளில் பொருளின் தன்மையும் பொருளீட்டும் முறைகளும் அவற்றைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் முறைகளும் எடுத்துரைக்கபட்டுள்ளது. குறள் கூறும் பொருளியல் சிந்தனைகள் இன்றளவும் வழிகாட்டும் பொருளியல் நெறிகளாக உள்ளனவா என்பது இவ்வாய்வின் பிரச்சினையாகும். திருக்குறள் வெளிப்படுத்தும் பொருளியற் சிந்தனைகளை வெளிப்படுத்துதலும், மனித வாழ்வில் பொருளின் முக்கியத்துவத்தை இந்நூல் எத்துணையளவு நிறுபித்துள்ளது என்பதனை எடுத்துக் காட்டுவதுமே இவ்வாய்வின் நோக்கங்களாகும். இதன் பொருட்டு இலக்கிய பகுப்பாய்வு முறை இவ்வாய்வின் பிரதான ஆய்வு முறையாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக, திருக்குறளின் உரைகள் அடங்கிய மூல நூல்கள் முதனிலைத் தரவுகளாகவும் திருக்குறள் மற்றும் பொருளியல் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் இரண்டாம் நிலைத்தரவுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாய்வு முற்றுமுழுதாக பண்புசார் ஆய்வாகவே அமைகின்றது. பொருளீட்டல் தொடர்பான முன்னையோர்கள் சிந்தனைகள் தற்கால சமூகத்திற்கு இன்றியமையாதவை. இன்றைய சமுதாயம் பொருளினாலும் பொருளீட்டல் முறைகளினாலும் மனிதநேயம் இழந்த நிலையில் தங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்ட மக்கள் கூட்டத்தை கொண்டிருக்கின்றது. பொருள் மனிதனுக்கு தேவையான ஒன்றே. இருப்பினும் அதனை ஈட்டுவதற்கும் பிரயோகிப்பதற்கும் நியமங்கள் உள்ளன. அத்தகைய நியமங்களை இன்றை சமூதாயத்திற்கு எடுத்துக் கூறும் இலக்கியமாக திருக்குறள் உள்ளது.

Description

Citation

6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 937-942.

Endorsement

Review

Supplemented By

Referenced By