கல்வியும், சமூக நெறிமுறைகளும், சமூக மேம்பாடும்: ஒரு சமூகவியல் நோக்கு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

South Eastern University of Sri Lanka

Abstract

கல்வியும் அதன் வளர்ச்சியும் புதிய புதிய அறிவியல்கள், கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞான வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்பமும் போன்றவைகள் இன்றைய உலகத்தை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்து விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்ததாக வளர்த்துள்ளது. எமது சமூகத்திலும் கல்விப் புலன்களிலும் மனித விழுமியப்பண்புகள், அறப்பண்புகள், நெறிமுறைகள் மனித நேயங்கள் இல்லாது எமது சமூகம் பிறழ்வான நடத்தை கொண்டதாக வளர்வதையும் காணலாம். கல்வியுpலும், கல்வி நிறுவனங்களிலும் முதன்மையான உறுப்பினர்களாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கிடையேயான தொடர்புகளை (Inter personal relationship) நேர்நிலையான நடத்தைகள் (Positive Behavior) நல்ல செயற்பாடுகள் (Good function) போன்றவைகளை பெற்றுக்கொள்ள நேர்நிலையான சமூகமயமாக்கல் ஏற்படுத்துதல் வேண்டும். அவ்வாறு ஏற்படும் போது தான் கல்வியினால் ஏற்படும் நன்மைகளை சமூகம் பெற்றுக்கொண்டு முரண்பாடற்ற, பிரச்சினைகளற்ற சமூக வளர்ச்சியை, விருத்தியை (Progress) அடையமுடியும். குடும்பத்தில் கல்வியும், சமூகமயமாக்கமும் (Socialization) தனிமனித நடத்தை, சமூக நடத்தை போன்றவைகளில் நீண்ட நிலைத்த (Sustainable) தன்மையுடையதான வளர்ச்சியை ஏற்படுத்த விரைய வேண்டும். அதற்கு இடைவினையை (Interaction) சமூகமயமாதலை மேற்கொள்ளும் முகவர்கள் (ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகநிறுவனகள் உறவினர்கள்) நேர்நிலையான இடைவினையுடன் ஒருங்கனைந்து ஒழுங்கமைப்பாக செயற்படுவார்களானால் கல்வி என்பதன் மூலம் நல்ல சமூக நடத்தையுள்ள மனித சமூகத்தை வளர்த்தெடுக்க முடியும். கல்வியின் மனிதவள விருத்தியினூடாக வாழ்கைத்திறன்கள், சமூகத்திறன்கள், தொடர்பாடல் திறன்கள், அறிவுசார்திறன்கள், உள் இயக்கத்திறன்கள், சமூக மொழியியல் திறன்கள் போன்றவற்றை பாடசாலைக் கூடாக வழங்க வேண்டும்.இவ் ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பலவற்றில் செய்யப்பட்ட ஆரம்ப ஆய்வுகளின் அடிப்படையை கொண்டது.இது பங்குபற்றும் அவதானம், குழு கலந்துரையாடல் மூலம் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டுள்ளது.

Description

Citation

6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 987.

Endorsement

Review

Supplemented By

Referenced By