சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையும் அது எதிர்க்கொள்ளும் சவால்களும்: இரத்தொட்டை பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு

dc.contributor.authorNithya, A.
dc.date.accessioned2017-01-29T10:55:13Z
dc.date.available2017-01-29T10:55:13Z
dc.date.issued2017-01-17
dc.description.abstractமத்திய மாகாண மாத்தளை மாவட்டத்தில் இரத்தொட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஒரு பயிர்ச்செய்கையாக இச் சிறு ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக் காணப்படுகின்றது. கொக்கோ, கறுவா, மிளகு, கராம்பு போன்ற இன்னோரன்ன பயிர்கள் நாட்டப்படுகின்றன. இந்த பயிர்ச்செய்கை இன்று பல்வேறுபட்ட மானிடக்காரணிகளால், அதன் உற்பத்தியாளர்களால் கைவிடப்படக்கூடிய நிலையில், உற்பத்தி அருகி வருகின்றது. இதனால் இப்பயிர்களின் கேள்வி இன்று அதிகரித்து வருகின்றது. இப்பிரதேசத்தில் சிறு ஏற்றுமதி பயிர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்காண்பதை பிரதான நோக்காகவும், அதனை ஓரளவேனும் குறைத்து இப்பயிர்ச் செய்கை பழைய நிலையை அடைவதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதையும், இப்பயிர்ச்செய்கை அருகி வருவதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணலையும் துணை நோக்காக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வின் முதல் நிலைத்தரவு சேகரிப்பு முறைகளாக நேர்க்காணல், கலந்துரையாடல், மற்றும் வினாக்கொத்துகளை பகிர்ந்தளித்தல் மூலமும், இரண்டாம் நிலைத் தரவுச் சேகரிப்பு முறைகளாக சிறு ஏற்றுமதி பயிர்செய்கை ஆராய்ச்சி நிலையத்தால் வழங்கப்பட்ட பதிவேடுகள், இணையம் ஆகியவற்றின் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத்தரவுகளானது Microsoft Excel, Arc GIS 10.1 போன்ற கணனி மென் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், இவ்வாய்வின் முடிவாக அருகி வரும் சிறு ஏற்றுமதி பயிர்களை இனங்கண்டு அருகிவருவதற்கான காரணிகளைக் கண்டறியக்கூடியதாக இருந்தது. மேலும் அக்காரணிகளை ஓரளவேனும் குறைத்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசணைகளை முன்வைக்க கூடியதாக இருந்தது.en_US
dc.identifier.citation5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka.en_US
dc.identifier.isbn978-955-627-100-3
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/2189
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts & Culture, South Eastern University of Sri Lankaen_US
dc.subjectஆராய்ச்சிநிலையம்en_US
dc.subjectபயிருக்கான கேள்விen_US
dc.subjectவிழிப்புணர்வுen_US
dc.subjectஉற்பத்திen_US
dc.titleசிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையும் அது எதிர்க்கொள்ளும் சவால்களும்: இரத்தொட்டை பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
ECO - Page 35-39.pdf
Size:
417.94 KB
Format:
Adobe Portable Document Format
Description:
Economics & Development Studies

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections