கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு குடும்பக் கட்டமைப்புகளில் ஏற்படுத்திய தாக்கங்கள்சமூகவியல் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
இலங்கையின் மத்திய மலைநாட்டின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள
மீரியபெத்த தோட்டத்தில் 2014 இல் ஏற்பட்ட மண்சரிவானது மக்களிடையே உயிரிழப்புக்கள், உடல்,
உளப் பாதிப்புக்கள், சொத்தழிவு, சமூக்கட்டமைப்பு மற்றும் சமூக நிறுவனங்களில்
மாற்றங்கள், சூழலியல் மாற்றங்கள் என பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மலைநாட்டில்
மண்சரிவு அனர்த்தங்கள் வழமையாக அமைந்தாலும் மீரியபெத்த தோட்ட மண்சரிவு வரலாற்றில்
பதியுமளவு முக்கியம் பெற்ற இயற்கை அனர்த்தமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் பல மக்களின்
உயிரிழப்புகளுக்கு இவ்வனர்த்தமே காரணமாக அமைந்துது. அனர்த்தத்திற்கு பின் மீள் கட்டுமான,
மீள் நிர்மாணப் பணிகள் அரசாங்கத்தினாலும், தனியார் நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. ஆயினும் இந்த ஆய்வானது மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு
சமூகக்கட்டமைப்பில் உள்ளடங்கும் குடும்பக் கட்டமைப்பில் எவ்வாறான தாக்கங்களை
ஏற்படுத்தியுள்ளது என்பதை விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. அத்தோடு மீரியபெத்த
மக்கள் அனர்த்தம் இடம்பெற்று இரண்டு வருடம் ஆகிய நிலையிலும் சரியான மீள்கட்டுமானமின்றி
உறவினர் வீடுகளிலும். வசதி வாய்ப்பற்ற வீடுகளிலும், தற்காலிக குடியிருப்புகளிலும் வாழ்ந்து
வருகின்றனர். இதனால் குடும்ப ரீதியாக பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர்.
இவ்வாய்வானது குடும்பக் கட்டமைப்பானது எவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை
எண்ணக்கரு சார்ந்து பகுப்பாய்வு செய்கின்றது. அத்தோடு எண் ரீதியான, தர ரீதியான மற்றும்
இரண்டும் இணைந்த முறையியல்கள் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 55
குடும்பங்களை மாதிரிகளாகக் கொண்டு பேட்டிமுறை, அவதானம் மற்றும் வினாக்கொத்து மூலமாக
தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவுமுறைச் சிக்கல்,
பாதுகாப்பற்ற தன்மை, போதிய வருமானமின்மை, பிள்ளைகள் சமூகமயமாதலில் தடங்கல், போதிய
உட்கட்டமைப்பு வசதிகளற்ற வீடுகள் அமைத்துக் கொடுத்தல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள்,
கல்விசார் பிரச்சினைகள், பாலியல்சார் பிரச்சினைகள், உளம்சார் பிரச்சினைகள், ஒழுக்கம் மற்றும்
பண்பாடுசார் பிரச்சினைகள் என பல பாதிப்புக்களை குடும்பம் சார்ந்து மக்கள்
எதிர்நோக்குகின்றனர் என்பதை வரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது.
Description
Keywords
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 835-840.
