தமிழில் மதியீனத்தினைக் கருப்பொருளாகக் கொண்ட கதை இலக்கியங்களின் தோற்றமும் செல்வாக்கும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
கதை இலக்கியங்கள் மிகப் பழங்காலந் தொட்டே தமிழில் செல்வாக்குப் பெற்று
வந்துள்ளன. எனினும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னதாகத் தமிழில் எழுந்த கதைகள்
வாசகர்களின் சிந்தனை, செயலாற்றல், விவேகம் என்பவற்றைத் தூண்டுவனவாகவே அமைந்தன.
இக் கதைகளுடன் ‘மதியீனத்தினை’ (Absurdity) மையமாகக் கொண்ட
நகைச்சுவையுணர்வினை முன்னிறுத்திய கதை மரபொன்று (Absurd Stories) ஐரோப்பியர்
காலத்தில் புதிதாக மேற்கிளம்புகின்றது. இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகை தந்து,
தமிழ்ப் பணியும் சமயப் பணியுமாற்றிய வீரமாமுனிவரின் ‘பரமார்த்தகுரு கதை’ இம் மரபிற்கு
அத்திவாரமிடுவதைக் காணலாம். இக் கதைமரபு தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான சூழல்,
செல்வாக்கு மற்றும் பரம்பல் என்பவற்றினைத் தாக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு
செய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. தாக்கக் கோட்பாடு என்பது மொழிகளுக்கிடையிலான
கொள்ளல் கொடுத்தல்களையும் இலக்கியப் பண்புகள் மற்றும் கூறுகள் பரம்பலும் வளர்ச்சியும்
அடையும் விதத்தினையும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதாகும். பரமார்த்தகுரு கதைகள்,
கி.பி 12 ஆம் நூற்றாண்டளவில் ஆங்கில வாய்மொழிமரபிலே தோற்றம் பெற்று, காலப்போக்கில்
ஐரோப்பாவின் பலமொழிகளிலும் செல்வாக்குப் பெற்ற ‘கோதம் கிராம புத்திசாலிகள்’ (Wise men of Gotham) என்னும் தொகுதியிலுள்ள கதைகளின் தாக்கத்திற்கு உட்பட்டவையாகும்.
இக் தொகுதியிலுள்ள கதைகள் பரமார்த்தகுரு கதையில் எத்தகைய தாக்கத்தினை
ஏற்படுத்தியுள்ளன என்பதனையும் வீரமாமுனிவர் தனது படைப்பில் தனித்துவத்தினை எவ்வாறு பதிவு
செய்துள்ளார் என்பதனையும் அதன் மூலமாகத் தமிழுக்குப் புதியதொரு கதைமரபினை எங்ஙனம்
தொடக்கி வைத்தார் என்பதனையும் நுணுகி நோக்குவதாக இவ்வாய்வு அமைகின்றது. இதன் மூலம்
மதியீனத்தினை முன்னிறுத்தும் கதைமரபின் தோற்றம் செல்வாக்கு என்பவற்றையும் வீரமாமுனிவரின்
படைப்பாளுமை, பரமார்த்தகுரு கதையின் தனித்துவம் மற்றும் சிறப்பு, மேனாட்டு கதை இலக்கியத்
தாக்கம் அதன் விளைவு முதலான விடயங்களையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
Description
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 858-864.
