இந்து மூலங்கள் வலியுறுத்தாத சதிவழக்கும் (உடன்கட்டை ஏறுதல்) அது பற்றிய மக்களின் புரிதலும்: விமர்சன நோக்கு

dc.contributor.authorசுபராஜ், என்
dc.contributor.authorகேசவன், எஸ்
dc.date.accessioned2016-12-29T09:06:04Z
dc.date.available2016-12-29T09:06:04Z
dc.date.issued2016-12-20
dc.description.abstractசதிவழக்கு என்பது கணவன் இறந்ததும் மனைவி உயிர்வாழ விரும்பாது கணவனுடன் இறந்து போவதைக் குறிக்கின்றது. இறைவனால் ஜனனம் (பிறப்பு) ஏற்படுத்தப்படுவது போல் மரணமும் தக்க காலத்திலேயே இடம் பெறல் வேண்டும். மரணம் மனிதர்களால் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கும் போது அது தீமையான விளைவுகளை தருகின்றது. அத்தகைய விளைவுகளையே சதி வழக்கும் தருகின்றது. சதி வழமை என்பது பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்யும் வழமையாகும். ஸதி, ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இந்து மதம் இதனை வலியுறுத்தாத போதிலும் இவ்வழமை இந்துக்கள் மத்தியில் நீண்ட காலமாக இந்தியாவில் சில பிரதேசங்களில் இருந்து வந்தது. உடன்கட்டை ஏறிய பெரும்பாலான பெண்கள் இதனை முழுமனதோடு விரும்பியே மேற்கொண்டுள்ளனர். உடன்கட்டை ஏறுவது சமூகத்தில் விரும்பப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. இந்துக்களைப் பொறுத்தவரையில் இவ்வழமை இந்தியாவில் குறிப்பாக வடஇந்தியாவின் ஒரு சில இடங்களிலேயே இருந்துள்ளது என்பதை புள்ளிவிபரத் தரவுகள் கூறுகின்றன. அதேவேளை இந்துமத மூல இலக்கியங்கள் எவற்றிலும் உடன்கட்டை ஏறுதல் அவசியமானதொன்று என்னும் நியமங்கள் விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தும் இந்துசமூகத்தில் இவ்வழமை வந்து புகுந்துள்ளது என்பதும் இவ்வழமை ஒரு சில இடங்களில் நடந்த போதிலும் ஒட்டுமொத்த இந்து சமூகத்தினராலும் இது நிகழ்த்தப்படுவதாக பறைசாற்றப்படுகின்றது என்பதும் இவ்வாய்வின் பிரச்சினைகளாகும். இந்து மூலங்கள் எவற்றிலும் உடன்கட்டை ஏறுதல் வலியுறுத்தப்படவில்லை, பிரித்தானிய அரசின் திட்டமிடப்பட்ட செயலே இப்பிரச்சினை பூதாகரமாக வெளிப்பட்டது என்பதனை எடுத்துக்காட்டுதலுமே இவ்வாய்வின் நோக்கங்களாகும். இவ்வாய்வுக்கு வரலாற்றியல் ஆய்வும், விமர்சன ரீதியான ஆய்வும் பயன்படுத்தப்படுகின்றன. உடன்கட்டை ஏறுதல் தொடர்பான உண்மைகளை வரலாற்று அடிப்படையில் அணுகுவதாலும் உடன்கட்டை ஏறுதலை விமர்சன ரீதியில் நோக்குவதாலும் முறையே இவ்வாய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் பிரதான நோக்கங்களை நிறுவுவதற்கு இரண்டாம் நிலைத்தரவுகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உடன்கட்டையேறுதல் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், இணையத்தளச் செய்திகள் என்பன இரண்டாம் நிலைத் தரவுகளாக அமைகின்றன. முடிவாக, உடன்கட்டை ஏறல் என்பது இந்துசமயத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்துள்ளது. ஆனால் தம் பதி மீது கொண்ட அன்பும், கைம்மை நோன்பின் (விதவையருக்கான நியம வாழ்வு) கொடுமையுமே பெண்களை உடன்கட்டை ஏறச் செய்தன. ஆனால் காலணித்துவ ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இவ்வழமையை பூதாகரமாக வெளிப்படுத்தியமையே ஒட்டுமொத்த இந்துசமூகத்திற்கும் இவ்வவப் பெயர் உருவாக காரணமாக அமைந்தது.en_US
dc.identifier.citation6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 943-948.en_US
dc.identifier.isbn978-955-627-097-6
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/2036
dc.language.isoen_USen_US
dc.publisherSouth Eastern University of Sri Lankaen_US
dc.subjectசதிவழக்குen_US
dc.subjectமரணம்en_US
dc.subjectபதிவிரதைen_US
dc.subjectகைம்மை நோன்புen_US
dc.subjectஆங்கிலேயர்en_US
dc.titleஇந்து மூலங்கள் வலியுறுத்தாத சதிவழக்கும் (உடன்கட்டை ஏறுதல்) அது பற்றிய மக்களின் புரிதலும்: விமர்சன நோக்குen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
IntSym_2016_proceeding_final_2_(1)_-_Page_943-948.pdf
Size:
683.09 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: