முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்துவதில் இமாம் பதீஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸியின் சிந்தனைகள்: (ரஸாஇலுன் நூர் நூலை மையப்படுத்திய ஆய்வு)

Abstract

இளைஞர்கள் எனப்படுவோர் ஒரு தேசத்தின் மிகப் பெரிய பெறுமதி மிக்க சொத்தாக மதிக்கப்படுகின்றனர். ஒரு நாட்டின் எதிர்கால மறுமலர்ச்சியின் பிரிக்கமுடியாத முதுகெலும்பாகவும் சமூக மாற்றத்தின் முன்னோடிகளாகவும் அவர்களே திகழ்கின்றனர். “முதியோர்கள் எனது பிரச்சாரப் பணியில் என்னைக் கைவிட்டபோது இளைஞர்களே எனக்கு கைகொடுத்து உதவினர் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 140உஸ்மானிய கிலாபத்தின் அந்திம காலப்பகுதியில் “துருக்கிய இளைஞர் இயக்கம்” என்றொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அது மதச்சார்பற்ற சிந்தனைகளையும் உஸ்மானிய கிலாபத்தை உடைப்பதற்கான நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து இளைஞர்களின் சிந்தனைகளில் பிழையான எண்ணக்கருக்கள் துருக்கியலும் அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியிலும் பரவலடைய ஆரம்பித்தது. இந்த வகையில் இன்றைய இளைஞர் சமூகத்திடையே பிழையான சிந்தனைகளும் பல வகையான சீரழிவுகளும் குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம்களைக் கொண்ட இலங்கை போன்ற நாட்டில் அவற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதை அவதானிக்கலாம். “போதை வஸ்த்துப் பாவனை போன்ற நடவடிக்கைகளின் விளைவால் அவர்களில் பெருந்தொகையானோர் சிறைகளிலும் சீர்திருத்த முகாம்களிலும் புனர்வாழ்வு வழங்கப்படுவதையும் மீள்பார்வை என்ற பத்திரிகை சுட்டிக்காட்டிசெய்தியினை வெளியிட்டிருந்தது”. 141 இத்தகைய இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கான சிந்தனைகள் பல மட்டங்களில் பேசப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இளைஞர்களின் சமகாலத்தின் தேவைகளை உணர்ந்து அவர்களின் அறிவு மட்டங்களை தட்டியெழுப்பும் பாங்கிலும் தத்துவாத்த ரீதியிலும் அணுகும் முயற்சிகள் மிக அரிதாகவே காணப்படுகிறது. எனவேää இந்த ஆய்வு இமாம் பதீஉஸ் ஸமான் நூர்ஸியின் “ரஸாஇலுன் நூர்” இன் ஒரு தலைப்பான “மறுமையின் வெற்றியை நோக்கிய இளைஞர்களுக்கான வழிகாட்டி” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்கின்றது. இமாம் பதீஉஸ் ஸமான் நூர்ஸி நவீன இஸ்லாமிய முன்னோடிகளில்துருக்கியை பிறப்பிடமாக கொண்ட குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமை. இலங்கை போன்ற நாட்டில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை சீரழிவிலிருந்து பாதுகாக்க இமாம் அவர்கள் முதன்மைப்படுத்தி; முன்மொழிந்துள்ள விடயங்களை அதன் சாத்தியப்பாடு தொடர்பாக இவ்வாய்வு அலசுகிறது. எனவே, இவ்வாய்வு முதலாம் நிலைத் தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகியவற்றை ஆய்வு மூலங்களாகக் கொண்டு பண்புசார் பகுப்பாய்வு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையிலுள்ள இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கு இமாம் நூர்ஸியின் சிந்தனை அரபுலக முன்னோடிகளைக் காட்டிலும் சாலப்பொருத்தமானதாக அமையும் என்பதை பல நியாயப்படுத்தல்களுடன் இவ்வாய்வு முன்வைக்கிறது.

Description

Citation

Second International Symposium -2015, pp 164-171

Endorsement

Review

Supplemented By

Referenced By