நூலகத்தை உபயோகிப்பதில் பல்கலைக்கழக மாணவர்களின் ஈடுபாடு: ஓர் மதிப்பீட்டாய்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்திய ஆய்வு

dc.contributor.authorZunoomy, M.S.
dc.contributor.authorShibly, F.H.A.
dc.contributor.authorAsan, A.P.M.
dc.date.accessioned2019-01-10T07:34:33Z
dc.date.available2019-01-10T07:34:33Z
dc.date.issued2018-11-29
dc.description.abstractசமூகத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பு செய்பவைகளாக நூலகங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நாட்டிற்கு சேவை செய்யும் புத்திஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் நூலகத்தை சுமந்திருப்பது அத்தியவசியமானதொன்றாகும். மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணைபுரிதல், அறிவை பெற்று வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்களில் நூலகங்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் அவற்றின் மூலம் மாணவர்கள் பூரண பயனடைவது பற்றி மீள் பரிசீலனை செய்வது காலத்தின் நிர்ப்பந்தமாகி விட்டது. இத்தோரணையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொது நூலகத்தை மையப்படுத்தி மாணவர்களுக்கும், நூலகத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிக்கொண்டுவரும் முகமாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னூறு மாணவர்கள் மாதிரிகளாக தெரிவுசெய்யப்பட்டனர். இதில் முதல் நிலைத்தரவுகளாக வினாக்கொத்து, கலந்துரையாடல், அவதானம், நேர்காணல் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இரண்டாம் நிலைத்தரவுகள் நூற்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. இவ்வாய்வின் தரவுகள் அனைத்தும் எம்.எஸ். எக்ஸல் (MS Excel) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பொது நூலகத்துடனான மாணவர்களின் தொடர்பை வெளிக்கொண்டு வருதல், சிறந்த முறையில் நூலகத்தை பயன்படுத்த வழிகாட்டல் வழங்குதல் ஆகிய இரு பிரதான நோக்கங்களை மையப்படுத்தியதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூலகத்தை பயன்படுத்துவது அவசியம், நூலக வசதிகள் திருப்திகரமான உள்ளது, கற்றலுக்கான சூழல் கிடைக்கப்பெறுகின்றது போன்றவற்றை மாணவர்கள் ஏற்றுக்கொண்டாலும் நூலகத்தில் நேரம் செலவிடுவதில், நூலகத்திற்கு வருகை தருவதில், நூற்களை அதிகம் இரவல் பெறுவதில் அவர்கள் கவனயீனமாக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அதாவது பொது நூலகம் கற்றலுக்கான வசதிகளை போதியளவு கொண்டிருப்பினும் அதனை பயன்படுத்தி பிரயோசனமடைவதை விட்டும் மாணவர்கள் கவனயீனமாக உள்ளனர் என்பதை இவ்வாய்வின் முடிவாக எடுத்துக்கொள்ளலாம். மாணவர்களை விழிப்புணர்வு பெறச்செய்வதில் இவ்வாய்வு உந்துசக்தியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.en_US
dc.identifier.citation5th International Symposium. 29 November 2018. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 19-28.en_US
dc.identifier.isbn978-955-627-135-5
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/3455
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka.en_US
dc.subjectநூலகம்en_US
dc.subjectபல்கலைக்கழக மாணவர்கள்en_US
dc.titleநூலகத்தை உபயோகிப்பதில் பல்கலைக்கழக மாணவர்களின் ஈடுபாடு: ஓர் மதிப்பீட்டாய்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்திய ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
PROCEEDINGS 2018 - Page 37-46.pdf
Size:
504.63 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: