ஹப்புத்தளை பிரதேசத்தில் சுற்றுலாத் துறைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka

Abstract

உலக நாடுகளில் மிக வேகமாக முன்னேறி வருகின்ற துறையாகவும் ஓரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டக்கூடிய ஓரு காரணியாகவும் சுற்றுலாத்துறை காணப்படுகின்றுது.இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு அபரிமிதமானதாகும். இலங்கையில் சுற்றுலாத்துறையானது வேகமாகவும் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரேதச சபைக்கு உட்பட்டதாக ஹப்புத்தளை பிரேதசம் காணப்படுவதுடன் சுற்றுலாத் துறைக்கான மையங்களையும் கொண்டுள்ளது. மாறுபட்ட கலாச்சாரங்களும் வேறுபட்ட பழக்கவழக்கங்களும் கொண்ட பல்லின மக்கள் வாழும் பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது இங்கு சுற்றுலாத்துறைக்கு சாதகமான காரணிகளாக சீரான குளிர் காலநிலை, இயற்கை காட்சிகள் , வரலாற்று மற்றும் சூழல் சார் சுற்றுலா மையங்கள் போன்றன காணப்படுகின்றன. இவ்வாய்வின் பிரதான நோக்கமாக இப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கான வழிவகைகளை இனங்காண்பதாகும். அத்துடன் இப்பிரதேசத்தில் காணப்படும் சுற்றுலாத்துறைக்கான உள்ளார்ந்த வாய்ப்புக்களை அடையாளம் காணல் , இப்பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு தடையாகவுள்ள காரணிகளை கண்டறிதல், அவற்றை களைவதற்கான தீர்வுகளை முன்வைத்தல் , மற்றும் இங்கு சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவற்கான வழிகளை முன்வைத்தல்.. போன்றன இவ்வாய்வின் துணை நோக்கங்களாகும்.இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக முதலாம் நிலைத்தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முதலாம் நிலை தரவுகளாக நேரடி அவதானம், நேர்காணல்(5-6 பேர்),வினாக்கொத்து (எழுமாறான முறை) போன்றவையும், இரண்டாம்நிலை தரவுகளாக பிரதேசசபை அறிக்கைகள், இணையத்தளம், பத்திரிகை கட்டுரைகள், நூல்கள் போன்றன பயன்படுத்தப்பட்டது. இப்பண்பு சார் மற்றும் அளவு சார் தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக Ms excel, Ms access, Arcgis போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தபடுத்தப்பட்டன. இப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகளாக எடிசன் பங்களா,துன்கிந்த நீர்வீழ்ச்சி மற்றும் லிப்டன்சிட்… போன்ற பல சுற்றுலா மையங்கள் காணப்படுவதுடன் இவற்றுக்கு தடையாக மூலதன பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள் சீரின்மை, சிறந்த முகாமையின்மை, வழிகாட்டல்களின்மை, மக்கள் ஒத்துழைப்பின்மை போன்றன காணப்படுகின்றன. இத்தடைகளை நீக்குவதற்காக சுற்றுலாத்துறை சார்ந்த முதலீட்டார்களை ஊக்குவிக்க அரச மற்றும் தனியார் வங்கிகளும் கடன் வசதிகளை விஸ்தரித்தல், ஒழுங்கமைந்த சுற்றுலா மையங்களை விருத்தி செய்தல் பொது மக்களின் ஒத்துழைப்புகளை பெறல் போன்றவற்றை விதந்துரைகளாக குறிப்பிடலாம்.இப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பொருளாதார மற்றும் சமுக ரீதியில் முக்கியம் பெறுவதற்கும் இவ்வாய்வு முக்கியம் பெறுவதுடன் ஒரு களமாகவும் அமைந்துள்ளது.

Description

Citation

5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 139-144.

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By