தஃவா பணிக்காக சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதில் ஆலிம்களின் நிலைப்பாடு: இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபுமொழிப்பீடத்தை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka.
Abstract
அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
தங்களின் தஃவா ஊடகமாக ஜபலுன்னூர் எனும் மலையை தெரிவுசெய்து தனது முதல் அழைப்பை
(தஃவாவை) ஆரம்பித்தார்கள். இன்று தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து இருக்கும் இக்கால
கட்டத்தில் தஃவாப்பணியை நிறைவேற்ற அனைத்து முஸ்லிம்களும் பொறுப்புடையவர்களாவர்.
இவர்களுள் தஃவா பணிக்கென்றே பயிற்றுவிக்கப்படும் ஆலிம்கள்1 பல்வேறு வகைகளிலும்
முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இத்தருணத்தில் அண்மைய வருடங்களாக அதிகம்
உபயோகிக்கப்பட்டு வரும் சமூகவலைத்தளங்களை தஃவா பணிக்காக அவர்கள்
பயன்படுத்துவதிலுள்ள கவனயீனம் காரணமாக தஃவா பணியில் இடைவெளி ஏற்படும் நிலைமை
உருவாகியுள்ளது. அதாவது தஃவா பணிக்காக சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் ஆலிம்கள்
அவற்றில் செலவிடும் கால அளவு குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் இல்லாதிருப்பதை
அவதானிக்க முடிகின்றது. இதனடியாக, இவ்வாய்வானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தை சேர்ந்த இருநூறு மாணவர்களை
பரீட்சிக்கின்றது. ஆலிம்கள் தஃவா பணிக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் கால அளவை
அறியப்படுத்தல், தஃவா பணிக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தல், அவற்றை தஃவா
பணிக்கு சிறந்த முறையில் பயன்படுத்த வழிகாட்டல் வழங்குதல் ஆகிய மூன்று தலையாய
நோக்கங்களை கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வில் முதலாம்
நிலைத்தரவுகள் வினாக்கொத்து, கலந்துரையாடல், அவதானம் மூலம் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட
தரவுகள் அனைத்தும் எம்.எஸ். எக்ஸல் (MS Excel) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆலிம்கள்
காலத்திற்கு ஏற்றாற் போல் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி தஃவா செய்ய வேண்டும் என்பதை
ஏற்றுக்கொண்டிருந்தாலும், அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதை விட்டும், போதுமான
நேரங்களை ஒதுக்குவதை விட்டும் கவனயீனமாக இருக்கின்றனர்;. என்பதை இவ்வாய்வின் முடிவாக
எடுத்துக்கொள்ளலாம். இறுதியாக, தஃவாப்பணி செய்ய சமூகவலைத்தளங்களை சிறந்த முறையில்
பயன்படுத்த வழிகாட்டல் வழங்கப்படுவதால் இவ்வாய்வு காலத்தின் தேவையை உணர்ந்து
மேற்கொள்ளப்பட்டுள்ளதை நிரூபிக்கின்றது. இதனடிப்படையில் இவ்வாய்வு மூலம் ஆலிம்கள் சிறந்த
வழிகாட்டல்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Description
Keywords
Citation
5th International Symposium. 29 November 2018. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 48-57.
