இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டையும் சமூக இணக்கத்தையும் பேணுவதில் முஸ்லிம்கள்: சுதேசிய மன்னராட்சிக்காலம் முதல் சிவில் யுத்தத்துக்குப் பின்னரான காலம் வரை

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Sri Lankan Journal of Arabic and Islamic Studies, South Eastern university of Sri Lanka.

Abstract

இலங்கையில் உள்ளுர் யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் சிறுபான்மை முஸ்லிம்களின் வரலாறு, இனத்துவம், மத அடிப்படைகள் மற்றும் நடைமுறைகள் என்பன பெருமளவுக்கு விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்தப் படுகின்றன. மேலும் தேசிய ஒருமைப்பாட்டையும் சமூக இணக்கத்தைப் பேணுவதில் முஸ்லிம்களின் அர்ப்பணிப்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இக்கட்டுரை இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டையும் சமூகங்களுக்கு இடையிலான இணக்கத்தையும் கட்டிக் காப்பதில் முஸ்லிம்கள் ஆற்றி வந்துள்ள வகிபங்களிப்பை மதிப்பீடு செய்வதாக உள்ளது. முழுவதும் இரண்டாம் நிலைத் தகவல்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரை,வரலாறு முழுவதும் காலணித்துவ ஆக்கிரமிப்பாளர்களாலும் வன்முறைக் குழுக்களாலும் அதிகார சக்திகளாலும் முஸ்லிம்கள் பல வழிகளில் விமர்சனங்களையும் தாக்குதல்களையும் எதிர்நோக்கி வந்துள்ள போதிலும் அவற்றுக்கான துலங்கல்களை முஸ்லிம்கள் வன் முறையால் வெளிப்படுத்தாது ஜனநாயக வழியில் அணுகி தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் சமூக இணக்கத்துக்கும் அபகீர்த்தி ஏற்படா வண்ணமே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதை அடையாளம் கண்டுள்ளது. முஸ்லிம்களின் இந்த வரலாற்று மாண்மியம் நினைவுகூர்ந்து ஏற்றுக்கொள்ளப்படுவதானது போருக்குப் பின்னரான முஸ்லிம்கள் மீதான தப்பபிப்பிராயங்கள் கழையப்படுவதற்கும் இனக்குழுக்களுக் கிடையேயான நல்லிணக்கச்செயன்முறை வெற்றியடைவதற்கும் மிகவும் அவசியமானது என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.

Description

Citation

Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 2(2): 63-73.

Endorsement

Review

Supplemented By

Referenced By