காத்தான்குடி பள்ளிவாயல்கள, முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் வறுமை ஒழிப்பிற்கான வழிமுறைகளும் செயற் திட்டங்களும்: காத்தான்குடியை மையப்படுத்திய ஓர் ஆய்வு

dc.contributor.advisorAfra, M. R. F.
dc.contributor.authorSamha
dc.contributor.departmentIslamic Studiesen_US
dc.date.accessioned2026-02-18T06:23:19Z
dc.date.accessioned2026-03-25T17:03:56Z
dc.date.available2026-02-18T06:23:19Z
dc.date.issued2024
dc.description.abstractபொருளாதார ரீதியில் பல முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்றைய மனித சமுதாயத்தில் வறுமை ஓர் தவிர்க்க முடியாத அம்சமாகவே காணப்படுகின்றது. இத்தகைய சிக்கல் வாய்ந்த நிலையினை சீர்செய்ய இஸ்லாம் தனித்துவமான கோட்பாட்டினை வழங்கி மக்களை வழிகாட்டுகின்றது. அந்தவகையில், ஓர் உன்னதமான நிவாரணியாக காணப்படுகின்ற ஸகாத்தினை தனியாக அல்லாமல் கூட்டாக நிறைவேற்றுவதனால் பாரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொள்ளவும் வகைசெய்கின்றது. இச்செயன்முறையை நடைமுறைப்படுத்த பல இஸ்லாமிய நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. அந்தவகையில், இவ்வாய்வு காத்தான்குடிப் பிரதேச முஸ்லிம்களின் வறுமை நிலையைக் குறைப்பதில் பைதுஸ் ஸகாத் நிறுவனத்தின் பங்களிப்பினை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பண்பு ரீதியான ஆய்வு முறையியலை கொண்டிருப்பதுடன் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளை உள்ளடக்கியுள்ளது. இதற்காகவென பைதுஸ் ஸகாத் நிதியப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களும் பைதுஸ் ஸகாத் நிதியப் பதிவேடுகள், ஆண்டறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையுள்ளவை பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பைதுஸ் ஸகாத் நிதியமானது அதன் மூலோபாயத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வறுமை ஒழிப்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அத்துடன் மக்களிடம் ஸகாத் பற்றிய போதிய புரிதலின்மை, ஸகாத் வழங்குவோர் நிஸாப் பற்றிய தெளிவின்மையால் குறைந்த தொகையை வழங்குகின்றமை, "ஸகாத் ஒரு கூட்டுக்கடமை" என்ற முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவின்மையினால் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு மாத்திரம் ஸகாத் வழங்கி சுருக்கிக் கொண்டமை, ஸகாத் நிறுவனத்தைப் பற்றிய விமர்சனங்கள் போன்ற பல சவால்களை ஸகாத் நிதியம் எதிர்நோக்கி வருகிறது என்பதை இனங்காணக் கூடியதாக இருந்தது. எனவே, இவ்வாய்விலிருந்து காத்தான்குடி பைதுஸ் ஸகாத் நிதியமானது வறுமை ஒழிப்பில் எவ்வாறு பங்காற்றுகின்றது என்பதனையும் அது தொடர்பான விழிப்புணர்வினையும் வழிகாட்டல்களையும் வழங்கும் விதமாக இவ்வாய்வு முக்கியம் பெறுகின்றது.en_US
dc.identifier.citationAbstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)en_US
dc.identifier.regnumSEU/IS/15/IC/034en_US
dc.identifier.urihttps://dspace.lib.seu.ac.lk/handle/123456789/7668
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lankaen_US
dc.subjectவறுமைen_US
dc.subjectஸகாத்en_US
dc.subjectகாத்தான்குடிen_US
dc.subjectபைதுஸ் ஸகாத்en_US
dc.subjectவசூலிப்புen_US
dc.subjectவிநியோகம்en_US
dc.titleகாத்தான்குடி பள்ளிவாயல்கள, முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் வறுமை ஒழிப்பிற்கான வழிமுறைகளும் செயற் திட்டங்களும்: காத்தான்குடியை மையப்படுத்திய ஓர் ஆய்வுen_US
dc.title.alternativeMethods and action plans of baituz zakat of the federation of Kattankudy mosques and Muslim institutions in poverty alleviation: a research based on Kattankudyen_US
dc.typeDissertationen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
FIA ALL ABSTRACTS-17-18.pdf
Size:
427.87 KB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description: