மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவதில் அஹதியா பாடசாலைகளின் வகிபாகம்: கேகாலை மாவட்டத்தை மையப் படுத்திய ஆய்வு, இலங்கை

Loading...
Thumbnail Image

Date

Authors

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka

Abstract

இலங்கை சமயங்களுக்கும் கலாசாரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் ஒரு தேசமாகும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளிடம் சகவாழ்வு , நல்லொழுக்க விழுமியங்கள் என்பவற்றை வளர்ப்பதன் ஊடாக தேசத்தையும் சமூகத்தையும் மதிக்கின்ற சமூகம் ஒன்றை உருவாக்க முடியும். இதற்கு இலங்கையில் அறநெறிப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. ஒழுக்கங்களும் பண்பாடுகளும் விருத்தியடைய வழி ஏற்படுகின்றது. அதனடிப்படையில் முஸ்லிம் மாணவர்களுக்காக அஹதியாப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு இன்று வரை செயற்பட்டு வருகின்றன. விழுமியங்கள் சரிந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் மாணவர்களை விழுமிய மிக்கவர்களாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். மாணவர்களிடையே சுயநலப் போக்கு, போட்டி, பொறாமை, இயற்கையை பாழ்படுத்தும் மனப்பாங்கு, வேற்றுமை மனப்பாங்கு, மரியாதையின்மை போன்ற எதிர்மறையான செயற்பாடுகள் மிகுந்து விளங்குகின்றன. இந்த வகையில் மாணவர்களின் ஒழுக்க பண்பாட்டு விருத்தியில் அஹதியாப் பாடசாலைகளின் வகிபாகம் மற்றும் அது மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்பவற்றை கண்டறிதல் எனும் நோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. பண்பு மற்றும் அளவு சார் தகவல்களை பயன்படுத்தி இடம்பெற்றுள்ள இவ்வாய்வில் முதலாம் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தகவல் திரட்டின் முதற்கட்டமாக, குறிக்கோள் மாதிரி முறையில் 8 பேர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 6 அஹதியாப் பாடசாலைகளில் 285 மாணவர்களிடமிருந்து Likert இன் 5 வகையான அளவு நிலைகள் மூலம் வடிவமைக்கப்பட்ட மூடிய வினாக்கொத்து வழங்கப்பட்டது. நேர்காணல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் குறியீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. வினாக்கொத்தினூடாகப் பெறப்பட்ட தரவுகள் யாவும் விபரணப் பகுப்பாய்வு முறையை பயன்படுத்தி SPSS நுட்ப முறையில் மைய அளவிடைப் போக்கை (central tendency) அளவிட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பகுப்பாய்வு செய்து பெறப்பட்ட தகவல்களின் படி கேகாலை மாவட்ட அஹதியாப் பாடசாலைகள் பல சவால்களுக்கு மத்தியில் மாணவர்களது தாக்கம் ஒழுக்க விருத்திக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்து வருகின்றன. எனினும் அவை மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தியுள்ள வீதம் குறைவாக காணப்படுகிறது. அத்தோடு சமகால போக்கிற்கு ஏற்ப அவை செயற்படாமை, பெற்றோர்களின் பொடுபோக்கு மற்றும் மாணவர்களின் ஆர்வமின்மை என்பன இதற்கு காரணங்களாக கண்டறியப்பட்டன. இவ்வாய்வு கேகாலை மாவட்ட அஹதியா சம்மேளனம் மற்றும் மத்திய அஹதியா சம்மேளனத்திற்கும் அவர்களது தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக அமையும்.

Description

Citation

Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)

Endorsement

Review

Supplemented By

Referenced By