பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்: கல்குடா கல்வி வலய 1AB பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
| dc.contributor.author | Thakshaayini, R | |
| dc.date.accessioned | 2016-12-28T05:44:03Z | |
| dc.date.available | 2016-12-28T05:44:03Z | |
| dc.date.issued | 2016-12-20 | |
| dc.description.abstract | அறிவைப் பெறக்கற்றல், பெற்ற அறிவினை காலத்திற்குகாலம் இற்றைப்படுத்திக் கொள்ளல், பொருத்தமாகக் கையளித்தல் என்பன இந்த நூற்றாண்டின் கல்வி தொடர்பான முக்கிய விடயங்களாகும். இவற்றினை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கே உண்டு. பாடசாலைமட்ட ஆசிரியர் அபிவிருத்தி என்பது (School Based Teacher Development- SBTD) மாணவரின் அடைவு மட்ட உயர்வு மற்றும் ஆளுமை விருத்திக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பு மிக்க ஆசிரியர்களை உருவாக்குவதற்காகப் பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தித் தேவையை இனங்காணல், திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்ட தொடர்ச்சியான வேலைத்திட்டமாகும். தற்போது பாடசாலைகளினால் தயாரிக்கப்படும் ஐந்தாண்டுத்திட்டத்தில் ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான (SBTD) வரைவு காணப்படுகின்றது. ளுடீவுனுசெயற்பாட்டிற்காக அமைச்சு, மாகாணம், வலயமட்டம் என்பவற்றிலிருந்து நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அதனைப் பாடசாலையானது கட்டாயம் செயற்படுத்த வேண்டியுள்ளது. அத்திட்டத்திற்காக ஆசிரியர்களுக்கான வேலைத்திட்டத்தினை இனங்காணல், திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் என்பன உள்ளடக்கியதாக SBTD செயற்படுத்தப்படல் அவசியமானதாகும். SBTD தொடர்பான தெளிவை அதிபர் ஆசிரியர்களிடையே ஏற்படுத்தல் இன்றியமையாததாகிறது. அத்துடன் SBTD யினை பாடசாலையில் செயற்படுத்தும் போது பல்வேறு சவால்களை எதிர் கொள்ளவேண்டியுள்ளது. இச் சவால்களை எதிர் கொண்டு ளுடீவுனுயை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தல் அவசியமாகும். மேலும் தற்காலத்தில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள், பிரமாணங்கள் ஊடாக ளுடீவுனு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பான தேவையுடையவர்களுக்கும் பயனுடையதாக அமையும் என்பதால் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வினைத் திறம்பட மேற்கொள்வதற்காக ஆய்வு நோக்கங்கள் தீர்மானிக்கப்பட்டு அவற்றை அடைந்துகொள்ளும் விதமாக வினாக்கொத்து, நேர்முகங்காணல் போன்ற தரவு சேகரித்தற் கருவிகள் தயாரிக்கபட்டு அவை தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளுக்கு வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. | en_US |
| dc.identifier.citation | 6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 759-765. | en_US |
| dc.identifier.isbn | 978-955-627-097-6 | |
| dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2011 | |
| dc.language.iso | en_US | en_US |
| dc.publisher | South Eastern University of Sri Lanka | en_US |
| dc.subject | அறிவுசார் சமூகம் | en_US |
| dc.subject | இற்றைப்படுத்தல் | en_US |
| dc.subject | வேலைத்திட்டம் | en_US |
| dc.subject | பாடசாலைமட்ட ஆசிரியர் அபிவிருத்தி | en_US |
| dc.title | பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்: கல்குடா கல்வி வலய 1AB பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு | en_US |
| dc.type | Article | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- IntSym_2016_proceeding_final_2_(1)_-_Page_759-765.pdf
- Size:
- 490.55 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description:
