பொருளாதார நெருக்கடியால் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: ஹங்குரான்கெத்த வலயப் பாடசாலை ஆசிரியர்களை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.
Abstract
அண்மித்த காலப் பகுதிகளில் இலங்கையில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியானது அனைத்து
சமூகப் பிரிவினரையும் பொருளாதார ரீதியாக பாரிய அளவில் பாதிக்கின்றது. இலங்கையில் அதிகரித்த
பணவீக்கத்தின் காரணமாக வேலையின்மை, விலையுயர்வு போன்றவற்றால் வறுமைக்கோட்டின் கீழ்
வாழும் மக்கள் மட்டுமன்றி நிலையான வருமானத்தைப் பெறும் சமூக மட்டத்தினரும்
பாதிப்பிற்குள்ளாகின்றனர். ஆசிரியர்களைப் பொறுத்தவரை சமூகத்தை உருவாக்கும் மயிற்கற்களாக
விளங்குகின்றனர். எனினும் இன்று பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொழிலாளர்கள் தங்கள்
தொழில்களில் கவனயீனமாகச் செயற்பட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஆசிரியர்கள் தங்கள்
தொழில்களில் கவனயீனமாகச் செயற்படுவது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயமாகும். அந்தவகையில்
இவ் ஆய்வானது மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத்த கல்வி வலயப்
பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறிவதனை பிரதான நோக்கமாகக்
கொண்டுள்ளது. அத்துடன் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை கண்டறிதல், பொருளாதார நெருக்கடி மிக்க காலகட்டத்தில் ஆசிரியர்கள் அவர்களின்
தொழிலில் திருப்தியடையும் மட்டத்தை அறிதல், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான
பரிந்துரைகளை முன்வைத்தல் போன்றவற்றை துணைநோக்கங்களாக கொண்டுள்ளது. இங்கு
ஹங்குரான்கெத்த வலயத்தில் 12 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் காணப்படும் 110 ஆசிரியர்களில்
எழுமாற்று மாதிரியினைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்டு முதல் நிலைத் தரவானது வினாக்கொத்து
மூலம் சேகரிக்கப்பட்டதுடன், இரண்டாம் நிலைத் தரவுகள் ஒவ்வொரு பாடசாலை அதிபர்களிடமும்
இருந்து பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இத் தரவுகளைப் பகுப்பாய்வு
செய்வதற்காக MS Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இவ்வாய்வானது ஹங்குரான்கெத்த கல்வி
வலயப் பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களை கண்டறிவதற்குரிய மாறிகளாக பால் நிலை,
விவாக நிலை, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை, வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் தூரம்,
பாடசாலைக்குச் செல்லும் முறை, வருமானம், செலவு பற்றிய நிலைப்பாடு என்பன பயன்படுத்தப்பட்டு
உள்ளது. இதன் அடிப்படையில் மாறிகளுக்கிடையில் நேரான தொடர்பு காணப்படுவதோடு ஆசிரியர்களில்
95 சதவீதமானோர் தம் தொழிலில் 50 சதவீதத்திற்கும் மேலான திருப்தியற்ற நிலையைக் கொண்டுள்ளனர்,
90 சதவீதமான ஆசிரியர்கள் தங்கள் வருமானம் குறித்து திருப்தியடையாமல் காணப்படுவதுடன், 100
சதவீதமான ஆசிரியர்கள் வரவைவிட செலவு அதிகம் என்ற கருத்திற்கு உடன்படுகின்றனர். அத்துடன்
இப்பொருளாதார நெருக்கடி மிக்க காலகட்டத்தில் 99 சதவீதமானவர்கள் சவால்களை எதிர்நோக்கக்கூடிய
ஆசிரியர்களாகக் காணப்படுகின்றனர், போன்ற முடிவுகள் பெறப்பட்டன. மேலும் ஆசிரியர்கள் தங்களின்
சம்பளத்தில் அதிகரிப்பை விரும்புகின்றனர் என்பதனை 92.7 சதவீதமானவர் தெரிவித்த விருப்பத்தின் மூலம்
கண்டறிய முடிகின்றது. இவ் ஆய்வின் பரிந்துரைகளாக, ஆசிரியர்களிற்கு சம்பள அதிகரிப்பை
ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை செலவுகளை ஈடுசெய்ய முடிவதுடன் அவர்களுடைய
சவால்களையும் முறியடிக்க முடியும், சகலரும் திருப்தியடையும் வகையில் அத்தியாவசிய பொருட்களை
பட்டியலிட்டு அவற்றிற்கான பொருத்தமான குறைந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்,
ஆசிரியர்களுக்கென தனியான பொதுப் போக்குவரத்து ஊடக வசதி அமைக்கப்பட அரசாங்கத்திற்கு
பரிந்துரை மேற்கொள்ளல், தற்கால பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு புதிய ஆசிரியர்
நியமனமானது உள்மாவட்டத்திலேயே அமையப்பெறல் மற்றும் பாடசாலைகள் பாதிப்புறாத வகையில் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளிற்கு இடமாற்றம் செய்தல் அல்லது தற்காலிகமாக இடமாற்றம்
செய்தல் போன்றன முன்வைக்கப்பட்டன.
Description
Citation
11th South Eastern University International Arts Research Symposium on “Coping with Current Crisis for the Sustainable Development with Partners in Excellence” on 06th December 2022. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 268-280.
